Thursday, April 18
Shadow

நடிகர் கருணாஸ் MLA பிறந்த தினம்

கருணாஸ் தமிழ்த் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பிப்ரவரி 21, 1970 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் “முக்குலத்தோர் புலிப்படை” என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் அந்த தேர்தலில் 8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார்.

இவர் நடித்த படங்கள்

கிரகணம், சங்க தலைவன், பண்டிகை, அச்சமின்றி, அழகு குட்டி செல்லம், கதகளி, ஜித்தன் 2, க க க போ, தில்லுக்கு துட்டு, புகழ், பழைய வண்ணாரப்பேட்டை, டார்லிங், கொம்பன், புலி, சவாலே சமாளி, கழுகு, எந்திரன், பாணா காத்தாடி, மாசிலாமணி, ராஜாதி ராஜா, அயன், பஞ்சாமிர்தம், சிலம்பாட்டம், திருவண்ணாமலை, திண்டுக்கல் சாரதி, தனம், ராமன் தேடிய சீதை, வல்லமை தாராயோ, யாரடி நீ மோகினி, சாது மிரண்டால், பொல்லாதவன், கற்றது தமிழ், பொறி, அற்புத தீவு, புலி வருது, திருவிளையாடல் ஆரம்பம், ஈ, அது ஒரு கனா காலம், தேவதையை கண்டேன், ஜனா, அட்டகாசம், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், வசூல் ராஜா எம் பி பி எஸ், புதிய கீதை, திருடா திருடி, பிதாமகன், வில்லன், நந்தா

இவர் இசையமைத்த படங்கள்

பகிரி, ராஜாதி ராஜா

இவர் பாடல் பாடிய படங்கள்

தலைமகன்