அதாகப்பட்டது மகாஜனங்களே – திரைவிமர்சனம்

share on:

இன்றய சினிமா நல்ல பொழுபோக்கு படங்களை நமக்கு சிறப்பாக கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் இந்த வாரம் ரிலீஸ் ஆகி இருக்கும் படம் அதாகப்பட்டது மகாஜனங்களே இந்த படத்தின் இயக்குனர் சின்ன திரையில் இருந்து வண்ணத்திரைக்கு வந்துள்ளார் முதல் படத்தில் தன முத்திரையை பதித்துள்ளார்.

விஜய் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த இன்பசேகர் இந்த படம் மூலம் தன முதல் முத்திரையை கலகலவென காமெடி திருவிழா நடத்தியுள்ளார் என்று தான் சொல்லணும் அதோடு தமிழ் சினிமாவுக்கு மிக சிறந்த ஒரு நடிகரையும் கொடுத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது ஆம் தம்பி ராமைய்யா மகன் உமாபதி இந்த படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார் முதல் படத்திலே மிக சிறப்பாக தனக்கு கொடுத்த வேலையை செய்துள்ளார் என்று தான் சொல்லணும் .

சரி இந்த படத்தில் நடித்த நடிகர்கள் கதையை பாப்போம் நாயகனாக உமாபதி நாயகியாக ரேஷ்மி ரதோர், உமாபதி நண்பனாக கருணாகரன் நம்மை சிரிக்கவைத்துள்ளார் வில்லனாக மனோபாலா நாயகி அப்பாவாக ஆடுகளம் நரேன் நாயகன் அப்பாவாக பாண்டியராஜன் சிறிது நேரம் வந்தாலும் நம்மை இவரும் சிரிக்கவைக்கிறார். காமெடி போலீஸ் ஆகா யோகி ஜேபீ படத்தின் இசை இம்மான் என்றால் சொல்லவா வேணும் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு P.K.வர்மா. படத்தை கதை திரைகதையமைத்து இயக்கி இருப்பவர் இன்பசேகர் சரி வாங்க படத்தின் கதை பாப்போம்

அப்பாவியான நாயகன் உமாபதி கிதார் வாசிப்பதில் வல்லவர். இதனால், அவரது அப்பா பாண்டியராஜன் தன்னுடைய அப்பாவின் நினைவாக உமாபதியின் புகைப்படத்துடன் அவரது முழு விவரம் அடங்கிய கிதார் ஒன்றை அவருக்கு பரிசாக அளிக்கிறார். இந்நிலையில், நாயகனின் நண்பர் பெரிய தொழிலதிபரான நரேனின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர், நாயகனுக்கு போன் செய்து தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், தான் அவசரமாக அங்கு செல்லவேண்டும் என்பதால், நான் வரும்வரை என்னுடைய வேலையை நீ பார்க்கவேண்டும் என்று நாயகனிடம் கெஞ்சுகிறார்.

நாயகனும் மனமிறங்கி, அந்த வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிடுகிறார். மயக்கம் தெளிந்தபோது அந்த வீட்டில் அனைவரும் மயங்கிய நிலையில் கிடக்கிறார்கள். இதைப் பார்த்ததும் தன்னுடைய நண்பனுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்கிறார் நாயகன். நண்பரும் என்னால் நீ மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவரை அங்கிருந்து கிளம்ப சொல்கிறார். அடுத்தபடியாக நண்பரும் போலீசுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை புகாராக கொடுக்கிறார்.

உடனே அங்கிருந்து கிளம்பும் உமாபதி தான் கொண்டு வந்த கிதாரை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிடுகிறார். சிறிது நேரம் கழித்து கிதார் நினைவில்வர, அதை எடுப்பதற்காக மீண்டும் நரேனின் வீட்டுக்கு சென்று கிதாரை தேடிப் பார்க்கிறார். ஆனால், கிதார் அங்கு இல்லை. அந்த கிதாரில் தன்னுடைய முழு விவரமும் இருப்பதால், ஒருவேளை போலீஸ்தான் அதை எடுத்துச் சென்றிருப்பார்களோ? என்று பயப்படுகிறார் நாயகன். இதனால் தான் மாட்டிக் கொள்வோம் என்றும் பயப்படுகிறார்.

மறுநாள் தன்னுடைய நெருங்கிய நண்பரான கருணாகரனிடம் சென்று நடந்த விஷயங்களை கூறி, தன்னைக் காப்பாற்ற அவரால் மட்டுமே முடியும் என்று நம்பி உதவி கேட்கிறார். இதற்குள், கொள்ளையர்கள் கிதார் மாட்டிக்கொண்டு வந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகிறது. அதன்பிறகு, தன்னுடைய கிதார் கொள்ளையர்கள் வசம்தான் இருக்கிறது என்பது தெரிந்துகொண்ட நாயகன், எப்படியிருந்தாலும் அந்த கிதார் போலீஸ் வசம் கிடைத்தால் தான் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டு கருணகாரனை வைத்து இந்த பிரச்சினையை தீர்க்க பார்க்கிறார்.ஆனால் உண்மையிலேயே பயந்தாங்கொள்ளியான கருணாகரன் இவருடைய பிரச்சினையை எப்படி தீர்த்து வைத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் மிக சிறந்த குணசித்திரநடிகர் மட்டும் இல்லை சிறந்த நகைசுவை நடிகர் அதோடு சிறந்த இயக்குனர் என்று பன்முகம் கொண்ட தம்பி ராமையா மகன் உமாபதி தன் தந்தை போலவே நிச்சயம் வலம் வருவர் என்பதில் துளியும் அச்சம் இல்லை என்று சொல்லலாம் மிக சிறந்த டான்சர் அதேபோல நடிப்பிலும் முதல் படத்திலே முத்திரை பதித்துள்ளார் என்று சொல்லலாம் கொஞ்சம் டபிங் பேசும்போது கவனம் வேண்டும் உமாபதி மற்றபடி ஒரு ஹீரோக்கான மொத்த தகுதியும் உங்களிடம் உள்ளது.

கதாநாயகி ரேஷ்மா ரத்தோர் நடிப்பில் ஓகேதான். நாயகனுக்கு அப்பாவாக வரும் பாண்டியராஜனுக்கு படத்தில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கவில்லை. இருப்பினும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொழிலதிபராக வரும் நரேன் நகைச்சுவையான கதாபாத்திரத்தை ரொம்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

மனோபாலாவுக்கு இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். கடைசியில், இவரது கதாபாத்திரம் கொடுக்கும் டுவிஸ்டு பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். கருணாகரன் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவர் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். படம் முழுவதும் அடிவாங்குவதும், அதை சமாளிப்பது என இவரது கதாபாத்திரம் நகர்ந்து சென்றிருக்கிறது. அதை வித்தியாசப்படுத்தி நடித்து அனைவரையும் வயிறு குலுங்க வைத்திருக்கிறார்.

தன்னுடைய கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். குடும்பத்தோடு சென்றால் கலகலப்பாக பொழுதை கழிக்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ விருந்து

Leave a Response