Friday, April 19
Shadow

Shooting Spot News & Gallerys

தெலுங்கு நடிகர் சந்தீப் மற்றும் சிம்ஹா இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ராவண கல்யாணம்’

தெலுங்கு நடிகர் சந்தீப் மற்றும் சிம்ஹா இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படம் ‘ராவண கல்யாணம்’

Shooting Spot News & Gallerys
  நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'ராவண கல்யாணம்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ஜே. வி. மது கிரண் இயக்கத்தில் தயாராகும் முதல் படைப்பு 'ராவண கல்யாணம்'. இதில் நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் இளம் நடிகரான சந்தீப் மாதவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகை தீப்ஸிகா மற்றும் புதுமுக நடிகை ரீது காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் நடிகர் ராஜேந்திர பிரசாத், சத்ரு, ராஜ்குமார் காசி ரெட்டி, மதுசூதன், குண்டு சுதர்சன், ஆனந்த், மணி பிரபு, சரத் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சிதம் மனோகர் ஒளிப்பதி செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். வசனத்தை பவானி பிரசாத் எழுத, ஸ்ரீகாந்த் பட்நாயக் படத்தொகுப்பு பணிகள...
பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய Children of Heaven

பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய Children of Heaven

Shooting Spot News & Gallerys
தமிழக அரசின் சமீபத்திய முன்னெடுப்பு 'அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்'. அதன்படி முதலாவதாக சாப்ளினின் The Kid திரையிடப்பட்டது. இந்த மாதத்திற்கான படம் Children of Heaven. இன்று (செப்டம்பர் 1) இயக்குனர் மிஷ்கின் வாலாஜாபாத் அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் அப்படத்தைப் பார்த்து பின்பு பேசினார். மிஷ்கினிடம் குழந்தைகள் கேள்விகள் கேட்க, நீண்ட கலந்துரையாடல் நடந்தது. உரையாடலின் இடையில் ஆரம்பித்த மழை கடைசி வரை பெய்ய, "இந்த உன்னதமான படத்தைப் பார்த்த மாணவர்கள் நீங்கள் அனைவரும் சொர்க்கத்தின் குழந்தைகள் தான்" என்று உரையை முடித்தார் மிஷ்கின்....
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் “ஹிட்லிஸ்ட்”

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் “ஹிட்லிஸ்ட்”

Shooting Spot News & Gallerys
தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களுக்கு பிறகு, RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்” திரைப்படம். RK Celluloids சார்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், மூத்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் “ஹிட்லிஸ்ட்”. நடிகர் சரத்குமார் முக்கிய கதாப்பத்திரம் ஏற்றிருக்கும் இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, இன்று எண்ணற்ற திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. தமிழ் சினிமாவில் புது வசந்தம் புதிய சரித்திரம் படைத்து பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாக காரணாமாயிருந்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். கமர்ஷியல் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் RK Celluloids ந...
ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “பெண்டுலம்” படப்பிடிப்பு,  பூஜையுடன் இனிதே துவங்கியது !!!

ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “பெண்டுலம்” படப்பிடிப்பு,  பூஜையுடன் இனிதே துவங்கியது !!!

Shooting Spot News & Gallerys
SURYA INDRAJIT FILMS  சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு, இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக “பெண்டுலம்” படம் உருவாகிறது. அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் இப்படத்தில் ஶ்ரீபதி, ஶ்ரீகுமார்,T.S.K, விஜித்,FIR ராம்,  ராம் ஜூனியர் எம் ஜி ஆர் , பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல்முறையாக எட்டு கதாப்பாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் ஒரு விறுவிறுப...

நட்சத்திரம் நகர்கிறது திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Shooting Spot News & Gallerys
சினிமாவில் நடித்து பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வருகிறார் அர்ஜுன் (கலையரசன்). அங்கு நாடகக் குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபடும் அவர், குழுவிலிருப்பவர்களின் கருத்தியலில் முரண்படுகிறார். தொடர்ந்து நாடகக் குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடத்த திட்டமிடப்படுகிறது. இதையொட்டி ரெனே (துஷாரா) - இனியன் (காளிதாஸ்) காதல் ப்ரேக் ஒன்றும் நிகழ்கிறது. இப்படியான பல கிளைக்கதைகளால் நகரும் நட்சத்திரக் கூட்டத்தில் இறுதியில் அரசியல் நாடகம் நடத்தப்பட்டதா, அர்ஜுன் என்ன ஆனார், துஷாரா - காளிதாஸ் காதல் என்னவானது என்பதை சொல்லும் படம்தான் 'நட்சத்திரம் நகர்கிறது'. தமிழ் என்கின்ற ரெனேவாக துஷாரா விஜயன். தமிழ் சினிமாவின் அழுத்தமான பெண் கதாபாத்திர வார்ப்பு. திமிரான உடல்மொழி, யாருக்கும் அஞ்சாத நெறி, தனக்கு தோன்றுவதை பேசி, பிடித்ததை செய்து, தனக்கு என்ன வே...
பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! – மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்.

பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! – மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்.

Shooting Spot News & Gallerys
திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தில் ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் புதிய சொகுசு குடியிருப்புகள் திட்டம் ‘ரூஃப்வெஸ் - நக்‌ஷத்ரா’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. 9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட இத்திட்டம் கடந்த மே மாதம் தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ் நிறுவனம் தற்போது தங்களது திட்டத்தின் கிழ் வெளியிட்ட அனைத்து வில்லாக்களையும் விற்பனை செய்திருப்பதோடு, சொன்னது போலவே தற்போது வில்லாக்களை கட்ட தொடங்கியுள்ளது. ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா வில்லாக்கள் திட்டத்தில் வீடுகள் வாங்கிய வாடிக்கையாள...
வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிக்கும் ‘பம்பர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி என்று வெளியாகிறது

வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிக்கும் ‘பம்பர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி என்று வெளியாகிறது

Shooting Spot News & Gallerys
கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன், ‘கொம்பன்’ மற்றும் சமீபத்தில் வெளியான 'விருமன்' புகழ் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 31 விநாயக சதுர்த்தி தினத்தன்று வெளியாகிறது. வித்தியாசமான முறையில் அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பம்பர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்றும் படத்தின் வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இயக்குந...
கோப்ரா’ குழுவினரை கோலாகலமாக வரவேற்ற பெங்களூரூ ரசிகர்கள்.

கோப்ரா’ குழுவினரை கோலாகலமாக வரவேற்ற பெங்களூரூ ரசிகர்கள்.

Shooting Spot News & Gallerys
சீயான் விக்ரம் நடிப்பில் தயாரான 'கோப்ரா' படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையிலான குழுவினர், பெங்களூரூக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர். தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் வெளியீட்டிற்கு முன்னர் அப்படக் குழுவினர், ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்பை பகிர்ந்து கொள்வதுடன், படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிவித்து, படத்தை திரையரங்குகளில் வருகை தந்து காண செய்வதற்கான ' முதல் நாள் முதல் காட்சி உத்தி'யை மேற்கொண்டு வருகிறார்கள். திருச்சி, மதுரை, கோவை, சென்னை, கொச்சி ஆகிய இடங்களுக்கு பயணித்த 'கோப்ரா' பட குழுவினர், இதன் தொடர்ச்சியாக பெங்களூரூக்கும் சென்றனர். பெங்களூரூவிலுள்ள நெக்ஸஸ் மால் எனும் வணிக வளாகத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான விழாவில் சீயான் வ...

டைரி திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Shooting Spot News & Gallerys
நடிகர் அருள்நிதி, 'டி ப்ளாக்', 'தேஜாவு' என தொடர்ந்து திரில்லர் ஜெனரிலான திரைக்கதைகளை தெரிவு செய்து நடித்து வருகிறார். ஏன்? என்ற கேள்விக்கு அவர் தான் பொருத்தமான பதிலை அளிக்க வேண்டும். இருப்பினும் திரில்லர் திரைக்கதைகளில் இருக்கும் சுவாரசியம் இந்த ‘டைரி’யிலும் இருந்ததா? இல்லையா? என்பதை இனி காண்போம். சீனாவில் 1995 ஆம் ஆண்டில் மாயமாக மறைந்த 375 என்ற இலக்கம் உள்ள பேருந்தை மையப்படுத்தி, ஏராளமான கதைகள் உருவாகி இருக்கிறது, தமிழில் முதன்முதலாக ‘டைரி’ எனும் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. காவல் அதிகாரிக்கான பணி நியமனத்திற்கு முன் பயிற்சி காலகட்டத்தில், பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குற்ற வழக்கை ஒன்றை மீண்டும் தூசு தட்டி... அவை சரியான முறையில் தான் விசாரணை நடைபெற்று இருக்கிறதா? அல்லது ஏதேனும் புதிய தடயங்கள் அல்லது குற்றவாளிகளை இனம் காண முடிகிறதா? எனும் கோணத்தில் வழக்கு ஒன்றை இவர் தெரிவு செய்கிறார்....

அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது

Shooting Spot News & Gallerys
ஜீ5 தளத்தின் லேட்டஸ்ட் வெளியீடாக திரையிடப்பட்ட, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த வாரம் (ஆகஸ்ட் 19, 2022) ஜீ5 தளத்தில்  திரையிடப்பட்ட, நடிகர் அருண் விஜய் நடித்த “யானை” திரைப்படம், குறுகிய காலத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து ஒரு அற்புதமான சாதனையைப் படைத்துள்ளது. இத்திரைப்படம், திரையரங்கில் வெளியான போதே  விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து பலத்த பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடதக்கது.  இப்போது ஓடிடி பிரீமியரில் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  பாசம், ஆக்சன், சென்டிமென்ட், காதல் மற்றும் குடும்பப் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹரி. இது தவிர...