Saturday, April 20
Shadow

Shooting Spot News & Gallerys

தி கிரே மேன் – பார்வையாளர்களை மயக்கத்தில் மூழ்கடிக்கும் ஒரு அதிசய உலகம் – ரூஷோ பிரதர்ஸ்

தி கிரே மேன் – பார்வையாளர்களை மயக்கத்தில் மூழ்கடிக்கும் ஒரு அதிசய உலகம் – ரூஷோ பிரதர்ஸ்

Shooting Spot News & Gallerys
Netflix தயாரிப்பில் ரூஷோ சகோதரர்களின் அடுத்த அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படம் ‘தி கிரே மேன்’, உலகத்தின் மிகப்பெரும் நட்சத்திரங்களின் பங்களிப்பில், விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ஒரு புத்தகத்திலிருந்து திரைப்படமாக, தி கிரே மேன் படத்தை உருவாக்க, இந்தக்கதை அந்தளவு ஏன் ரூஷோ சகோதரர்களை கவர்ந்தது என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பொதுவாக ஆக்‌ஷன் படங்களுக்கு பெயர் பெற்ற ரூஷோ சகோதரர்கள் இது குறித்து கூறுகையில்.., “எங்கள் பிஸியான ஷெட்யூலால் இந்தப் படத்தைத் தயாரிக்க எங்களுக்கு ஒன்பது வருடங்கள் ஆனது. மார்க் க்ரேனியின் எழுத்து மற்றும் அவர் ஒவ்வொரு விசயம் குறித்து செய்யும் ஆராய்ச்சிகள் கண்டு நாங்கள் வியந்தோம். ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் சுவாரசியமான கதைகளை உருவாக்குவதற்கான தேடலில் தான் நாங்கள் எப்போதும் இருக்கிறோம். நாங்கள் வளர்ந்த 70களின் த்ரில்லர்களால் ஈர்க்கப்பட்ட வகையில், தி கிரே மே...
விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்களால் ஆவலை தூண்டுகிறது

விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்களால் ஆவலை தூண்டுகிறது

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ‘கொலை’ திரைப்படம் கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இந்த 'கொலை' சஸ்பென்ஸ் மர்ம திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களின் புதுமையான முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் இந்த புதுமையான முயற்சி மீனாட்சி சவுத்ரி நடித்த ‘லீலா’ கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பான்-இந்...

நான்கு கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் ‘வார்டு126’

Shooting Spot News & Gallerys
    SSB டாக்கீஸ் தயாரிப்பில் செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வார்டு 126'. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, நாயகர்களாக மைக்கேல் தங்கதுரை மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்கே சுரேஷ் குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள படத்திற்கு வருண் சுனில் இசையமைத்துள்ளார். இவர் சூப்பர் ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு இசையமைத்தவர். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார் படம் பற்றி இயக்குநர் செல்வகுமார் செல்லப்பாண்டியன் கூறும்போது, ஒவ்வொரு துறையிலும் ஒரு ...
நடிகர் ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “மல்லு கேர்ள்” வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

நடிகர் ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “மல்லு கேர்ள்” வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

Shooting Spot News & Gallerys
நடிகர் ஜீவாவின் “வரலாறு முக்கியம்” திரைப்படத்திலிருந்து ஷான் ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ள இரண்டாவது சிங்கிள் டிராக் - ‘மல்லு கேர்ள்’ வெளியாகி, பரபரப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. அனைத்து வகை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகர் ஜீவா, தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை தருவதில் எப்போதும் தவறியதில்லை. அவரது முந்தைய படங்களைப் போலவே, அடுத்ததாக அவரது நடிப்பில் வரவிருக்கும் 'வரலாறு முக்கியம்' படத்தின் மீதும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இப்படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான - பொத்தி பொத்தி வளத்த புள்ள, பாடல் படம் 100% குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை, உறுதிப்படுத்துவதாக இருந்தது. தற்போது இரண்டாவது சிங்கிளான - ‘மல்லு கேர்ள்’ பாடல், இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் தென்ன...

நதி படத்தில் ஏன் நடித்தேன் காரணத்தை சொன்ன கயல் ஆனந்தி

Shooting Spot News & Gallerys
Mas Cinemas சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K.தாமரைசெல்வன்  இயக்கத்தில், காதலையும், நட்பையும் மையமாக கொண்டு, சமூக அவலங்களை சாடும், ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "நதி". அனைத்து பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது.., “இந்த படத்தின் மூலம் கரு பழனியப்பன் போன்ற ஒரு சகோதரர் எனக்கு கிடைத்துள்ளார். இயக்குநர் எந்தவித பதட்டமும் இல்லாமல், படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் எனக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் நன்றி” இயக்குநர் A வெங்கடேஷ் பேசியதாவது.., “AP International உடன் இந்த படத்தை இணைந்த...
சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

Shooting Spot News & Gallerys
சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாக தயாராகும் இந்த படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V. குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர் சி...
ரசிகர்களை கவர்ந்த ஏஜென்ட் டீசர்*

ரசிகர்களை கவர்ந்த ஏஜென்ட் டீசர்*

Shooting Spot News & Gallerys
அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, இணையும், ஏகே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பான் இந்திய திரைப்படமான ‘ஏஜென்ட்’ படத்தின் மாஸ், ஸ்டைலிஷ் மற்றும் அதிரடி டீசர் வெளியிடப்பட்டது. திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்து இவ்வாண்டின் மிக முக்கியமான திரைப்படமான ஏஜென்ட் படத்தின் தமிழ் மற்றும் கன்னட மொழி டீசரை வெளியிட்டனர். அதே நேரத்தில் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முறையே அகில் மற்றும் மம்முட்டி இதன் டீசரை வெளியிட்டனர். இந்தி பதிப்பு டீசரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மகாதேவாக நடித்துள்ள நடிகர் மம்முட்டி அவர்களின் பார்வையில் இந்த டீசர் காட்டப்பட்டுள்ளது. ஒரு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர், 'ஏஜென்டின்' தைரியம், வீரம் மற்றும் கணிக்க முடியாத தன்மையை பற்றி கூறுகிறார். அவன் மிகவும் தைரியமான, தீவிரமான...

மை டியர் பூதம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Shooting Spot News & Gallerys
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ராமநாராயணன் டைப் படத்தை தியேட்டரில் பார்த்த உணர்வை தருகிறது மை டியர் பூதம். மஞ்சப்பை, கடம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராகவனின் 3வது படம் தான் இந்த மை டியர் பூதம். குழந்தைகளுக்கான படமாக அவர் இயக்கி உள்ள மை டியர் பூதம் 90களில் குழந்தைகளாக இருந்தவர்களை மகிழ்விக்கும், 2022 கிட்ஸ்களை கவருமா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். அதே அலாவுதீன் பாணி திரைப்படம் தான் இந்த மை டியர் பூதம். முனிவரிடம் மகன் பெற்ற சாபத்தை அப்பா பூதமான கர்க்கிமுகி (பிரபுதேவா) வாங்கிக் கொண்டு பொம்மையாக மாறி விடுகிறார். அந்த பொம்மையில் இருந்து பூதத்தை விடுவிக்கும் சிறுவன் திருநாவுக்கரசுக்கு (சூப்பர் டீலக்ஸ் புகழ் மாஸ்டர் அஸ்வத்) தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக மாறுகிறார் பிரபுதேவா. மீண்டும் தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர அந்த சிறுவன் ஒரு விஷயம் செய்ய வேண்டும், அதை தி...

கார்கி திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5)

Shooting Spot News & Gallerys
சாய் பல்லவி நடிப்பில் சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் வெளியிட்டுள்ள 'கார்கி' படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். ஒன்பது வயது குழந்தையை நான்கு வடமாநில இளைஞர்கள் கற்பழித்து விடுகின்றனர். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஐந்தாவது நபராக சாய் பல்லவியின் அப்பா ஆர்.எஸ். சிவாஜியும் கைதாகிறார். இதனால் சாய்பல்லவி குடும்பம் பெறும் இன்னல்களுக்கு ஆளாகிறது. சட்ட போராட்டங்களின் மூலம் தனது அப்பாவை மகள் காப்பாற்றினாரா?இறுதியில் அவருக்கு என்ன ஆனது என்பதே கார்கி படத்தின் கதை. கார்கி படத்தில் சாய் பல்லவி பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். எந்தவித பெரிய மேக்கப்பும் இல்லாமல், மிகவும் எளிமையாக படம் முழுக்க நமது பக்கத்து வீட்டு பெண் போலவே காட்சியளிக்கிறார். சாய்பல்லவியின் எதார்த்தமான நடிப்பும், அழுத்தமான திரைக்கதையும் படத்தின் வெற்றிக்கு வலு சேர...

துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் சிவி 2.

Shooting Spot News & Gallerys
சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக படமாக்கியுள்ளார்கள். சிவி 2 திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு வெளியிடுகிறார்.இவர் இதற்கு முன்பாக சமீபத்தில் வெளியான மாயோன் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார் இதை தொடர்ந்து விரைவில் படங்களை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள். காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிட...