விஜய் சேதுபதி கருப்பன் படத்துக்கு தடையா? கோர்ட் நோட்டீஸ்

share on:

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய அந்தஸ்தை பெற்ற நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி அது மட்டும் இல்லாமல் மிக சிறந்த நடிகர் பட்டியலில் இடம் பிடித்தவரும் தான் செய்யும் கதாபாத்திரங்களை மிகவும் உணர்ந்து தேந்த்டுப்பதில் வல்லவர். இந்த பாத்திரம் நடித்தால் நல்ல பெயர் கிடக்கும் என்று தெரிந்து வைத்த நடிகர் அதற்கு ஏற்ப கதைகளையும் இயக்குனர்களையும் தேர்ந்தடுப்பதில் மிக சிறந்த திறமை கொண்டவர் அதே போல ஒரு கதை பிடித்து விட்டால் இமேஜ் எல்லாம் பார்க்காமல் நடிப்பவர். விஜய் சேதுபதி
அப்படிப்பட்ட விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் கருப்பன் படத்துக்கு தடையாம்.
ரேனிகுண்டா படத்தை இயக்கிய ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘கருப்பன்’. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். முதலில் ரித்திகா சிங் நடிப்பதாக தான் இருந்தது. ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாகிவிட்டதால் இதில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

அதன்பின் லட்சுமி மேனனைத் தேர்வு செய்தனர் படக்குழுவினர். படப்பிடிப்பின்போது லட்சுமி மேனனுக்குக் காலில் அடிபட்ட காரணத்தினால் அவர் விலகிவிட, அதன் பின்னர் தான் ‘பலே வெள்ளையத் தேவா’, ’பிருந்தாவனம்’ படத்தில் நடித்த தன்யா தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பலத்தை வரவேற்பை பெற்றது. வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், ‘கருப்பன்’ திரைப்படத்தில் கொம்பன் காளை தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதன் உரிமையாளர் திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளர் எம். காத்தான், படத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இயக்குநர் ஏ. பன்னீர்செல்வம், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Response