Friday, April 19
Shadow

நோட்டா – திரைவிமர்சனம் (ரஜினி,கமல்,மற்றும் விஜய் பார்க்கவும் Rank4/5

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடிக்கிறார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இவர் இயக்குனர் முருகதாஸ் சிஷ்யன் என்பதை மிகவும் ஆனிதரமாக நிருபித்துள்ளார். அதுவும் மூன்றவது முறையாக பல அரசியல் படம் வந்து இருந்தாலும் இது முற்றிலும் வித்தியாசமான படம்.

இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை மிக சாமர்த்தியமாக கூறியிருக்கும் படம் தான் நோட்டா படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து கதை ஓட்டத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் அரசிய படத்துக்கு மிக முக்கியம் திரைகதை என்பதை உணர்ந்து செயல்பட்டுள்ளார்.

இதற்க்கு முன் இருக்கும் அரசியல்வாதிகளும் சரி இன்று அரசியலுக்கு வர துடிக்கும் நடிகர்களும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் குறிப்பாக ரஜினிகாந்த் கமல்ஹாசன் அடுத்த இளைய தலைமுறைகள் விஜய் உதயநிதி ஸ்டாலின் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

இந்த படத்தில் அறிமுக நாயகனாக விஜய் தேவரகொண்டா நாயகியாக இல்லை கதை நாயகி மெஹ்ரின் பிர்சாடா சத்யராஜ், நாசர்,எம்.எஸ்.பாஸ்கர்,சஞ்சனா நடராஜன், மொட்டை ராஜேந்திரன்,யாசிகா ஆனந்த் கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவில் சாம் CS இசையில் ஆனந்த் ஷங்கர் மற்றும் ஷான் கருப்புசாமி திரைக்கதையில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஞாவேல்ராஜா தயாரிப்பில் வெளிவந்து இருக்கும் படம் நோட்டா

நோட்டா படத்தின் கதை: ஆட்சியில் இருக்கும் முதல்வர் (நாசர்) மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். இதனால், தனது மகன் வருண் (விஜய் தேவேர்கொண்டா)வை தற்காலிக முதல்வராக முதல்வர் சீட்டில் அமர செய்கிறார். அரசியல் மீது ஆர்வம் இல்லாத வருண், பதவியில் அமர்ந்த பின்னர் மாநிலத்தை எப்படி மாற்றியமைக்கிறார் என்பது தான்.

நோட்டா படத்தின் விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஒரு முழுமையான அரசியல் படத்தைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் குறையை இந்தப் படத்தின் மூலம் தீர்த்து வைத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர்.

தமிழ் சினிமாவையும், தமிழ்நாட்டு அரசியலையும் பிரிக்க முடியாது. அப்படி ஒன்றுக்கொன்று இரண்டறக் கலந்தது. இன்று இங்குள்ள முன்னணி ஹீரோக்களே நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் தெலுங்கிலிருந்து ஒரு ஹீரோவை அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

தமிழ் பேசத் தெரியாத ஒரு தெலுங்கு ஹீரோ எந்தவிதமான தெலுங்கு சாயலும் இல்லாமல் தமிழை இந்த அளவிற்கு நேசித்து, பயிற்சி பெற்று, பேசி நடித்திருப்பது மிகப் பெரிய விஷயம். அதற்காகவே படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கு கள்ள ஓட்டுக்களைக் கூட தாராளமாகக் குத்தலாம்.

தன் மீது விரைவில் வர உள்ள ஒரு வழக்கு கைது நடவடிக்கைக்காக, ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் மகன் விஜய் தேவரகொண்டாவை தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்குகிறார் அப்பா நாசர். வேண்டா வெறுப்பாக பதவியேற்கும் விஜய், அதன்பின் அந்தப் பதவியில் இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என பத்திரிகையாளர் சத்யராஜ் ஆலோசனைப்படி அதிரடி அரசியல் ஆட்டத்தில் இறங்குகிறார். அந்த ஆட்டத்தில் அவர் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை சம்பாதிக்கிறார், அவற்றை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்த நோட்டாவின் கதை.

தமிழ்நாட்டில் தற்போது மழை பெய்து கொண்டு ரெட் அலர்ட் என்று பரபரத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தெலுங்கு தேசத்திலிருந்து தமிழ் தேசத்திற்கு விஜய் தேவரகொண்டா என்ற ஒரு புயல் வந்து இறங்கியிருக்கிறது. இது இங்குள்ள ஹீரோக்களுக்கும் ஒரு ரெட் அலர்ட் தான். சூர்யர், அஜித் கலந்த ஒரு கலவையாக இருக்கிறார் விஜய் தேவரகொன்டா. ஜாலியாக சுற்றித் திரிந்து கொண்டிருப்பவர் பேருந்து எரிக்கப்பட்ட ஒரு சம்பத்தின் போது பத்திரிகையாளர்களை நோக்கி மிரட்டலாகப் பேசும் அந்த ஒரு காட்சி போதும் அவருடைய நடிப்பைப் பற்றி சொல்ல. அதன்பின் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய அதிரடி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த நோட்டா விஜய்க்கு தமிழிலும் ஒரு சிறப்பான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

படத்தின் இரண்டு முக்கிய புள்ளிகள் சத்யராஜ், நாசர். இவர்களில் நாசர் முதல்வராக இருந்து பதவி விலகியவர், சத்யராஜ் ஒரு பத்திரிகையாளர். இவர்களிருவருக்கும் படத்தில் என்ன தொடர்பு என்பது எதிர்பாராத சஸ்பென்ஸ். நாசர், சொல்லவே வேண்டாம், வழக்கம் போலவே அற்புதமாக நடித்திருக்கிறார். அரசியல் என்றால் என்ன என்பது அவருடைய முகபாவத்துடன் மட்டுமல்ல, குரலிலும், வசன உச்சரிப்பிலும் கூடத் தெரிகிறது.

படத்தின் நாயகி என்று மெஹ்ரீன்–ஐ சொல்வதை விட எதிர்க்கட்சித் தலைவரின் வாரிசாக வரும் சஞ்சனா-வைச் சொல்லலாம். படத்தில் இவருடைய கதாபாத்திரப் பெயரான கயல் என்பதும், இவருடைய தோற்றமும் தற்போதைய பெண் வாரிசு அரசியல் பிரமுகரை ஞாபகப்படுத்துகிறது. முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் ஒரு கதாபாத்திரம், அந்த வாய்ப்பை சஞ்சனா வீணாக்கவில்லை. மெஹ்ரீன் படத்தின் ஆரம்பத்தில் ஒரே ஒரு கேள்வி கேட்கிறார். அதன்பின் அவருக்கு முக்கியத்துவமில்லை.

அரசியல் என்றாலே வலது கரம் இல்லாமலா ?, அப்படி ஒரு வலதுகரமாக எம்.எஸ்.பாஸ்கர். ஒரு உண்மையான வலது கரம் எப்படி இருப்பார் என்பதை இவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சாம் சிஎஸ் இசையில் இரண்டு துள்ளல் பாடல்கள் மட்டுமே இருக்கின்றன. மற்றபடி பின்னணி இசையில் எந்த பாதகமும் செய்யாமல் படத்தின் ஜீவனைக் கூட்டியிருக்கிறார்.

படத்திற்கு பலமான காட்சிகள் பல உள்ளன. அவை இன்றைய அரசியல் காட்சிகள் , கடந்து போன சில அரசியல் காட்சிகள் ஆகியவற்றை ஞாபகப்படுத்துகின்றன. முதல்வரைப் பார்த்து மந்திரிகள், எம்எல்ஏக்கள் குனிவது, செம்பரம்பாக்க ஏரி திறப்பு சம்பவம், ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் குடித்துவிட்டு அமர்க்களம் செய்வது, ஆஸ்பிட்டல் காட்சி, ஸ்டிக்கர் மேட்டர், இடைத்தேர்தல், கார்ப்பரேட் சாமியார் என காட்சிகள் வரும் போது தியேட்டரில் கைதட்டல் அதிகமாகவே ஒலிக்கிறது.

இடைவேளைக்குப் பின் பரபரப்பான அரசியல் அதிரடி ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்தால், அவ்வப்போது மட்டுமே அது வருவது ஒரு குறை. முதல்வராக இருக்கும் விஜய்யை எதிர்த்து எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியினர் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் அதில் ஏமாற்றமே. நேரடி அரசியல் தாக்குதல் இல்லாமல், பணத்திற்காக ஒரு சாமியார் செய்யும் மோசடி வேலை என்பதில் பெரிய பரபரப்பு திரைக்கதையில் இல்லை. இந்த ஆட்டத்தை இன்னும் வேறு விதமாக ஆடியிருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது.

இந்த படம், பாரத் ஆகிய நானு படத்தை போன்றே தொடங்குகிறது. மகன் சிஎம் ஆகும் சீன் முதல் குடும்பம் உள்பட அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. முதல் பாகத்தில் வரும் பாடல்கள் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கராக இருந்து விடுகிறது. எதிர்கட்சியின் மகளிர் அணி தலைவியாக நடித்துள்ள சஞ்சனா சிறப்பாக நடித்துள்ளனர். ஆனாலும், வயதுக்கு மீறி பேசும் குழந்தை கேரக்டர் கொஞ்சம் ஓவராக இருக்கிறது. மதிப்பிற்குரிய அரசியல்வாதியான வருண், பத்திரிகையாளராக நடித்துள்ள சத்யராஜ், இருவரும் குழந்தை இருக்கும்போதே தண்ணியடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது வருத்ததை அளிக்கிறது படத்தில் இடம் பெற்றுள்ள பல அரசியல் காட்சிகள், முதல்வன் படத்தை நமக்கு நினைவு படுத்துகிறது. மொத்தத்தில் ரவுடி சிஎம் சிறந்த படமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் நோட்டா மக்களின் மனசாட்சி Rank4/5