ருபாய் – திரைவிமர்சனம் (இந்த ருபாய் செல்லும்) Rank 3.5/5

share on:

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவு என்பார்கள் அது போல தீமை ஆகாது என்பது தான் பொன் மொழி அதை கருவாக வைத்து எடுத்த படம் தான் ருபாய் திரைப்படம் நல்ல சமுக அக்கறை கொண்ட படம் என்று சொன்னால் மிகையாகது அந்தளவுக்கு ஒரு நல்ல கருத்தை களமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் அன்பழகன் இவரின் முதல் படைப்பும் மிக சிறந்த படைப்பு அது தான் சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தன முதல் படம் மூலம் சமுகத்துக்கு சாட்டை அடிகொடுத்த மிக சிறந்த இயக்குனர் என்று சொன்னால் மிகையாகது. காரணம் கல்வியின் முக்கியத்துவம் முதல் படம் இரண்டாம் படம் அடுத்தவர்கள் சொத்துக்கு ஆசைபட்டால் என்ன என்ன விளைவுகள் வரும் என்று மிக நேர்த்தியாக சொல்லி இருக்கும் படம் ருபாய்.

இந்த படத்தில் கயல் படம் மூலம் அறிமுகமான சந்திரன் தான் ஹீரோ அதே படம் மூலம் அறிமுகமான ஆனந்தி தான் நாயகி அருமையான நடிப்பு சந்திரன் நண்பனாக அறிமுக இரண்டாவது ஹீரோ கிஷோர் ரவிச்சந்திரன் ஆனந்தி அப்பாவாக சின்னி ஜெயந்த் வில்லனாக கொள்ளைக்காரனாக ஹாரிஸ் உத்தமன் இன்ஸ்பெக்டராக ஆர்.என் ஆர்.மனோகர் மற்றும் பலர் நடிப்பில் இம்மான் இசையில் அருமையான மெலடி பாடல்கள் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு செய்துள்ளார் இளையராஜா கதை திரை கதை எழுதி சமுகத்தின் அக்கறையாக இயக்கியுள்ளார் இயக்குனர் அன்பழகன் .

கதைக்களம்…
லோடு வேன் ஓட்டும் சந்திரன் மற்றும் நண்பர் கிஷோர் ரவிச்சந்திரன் இருவரும் சென்னைக்கு செல்கிறார் லோடு ஏத்தி செல்கிறார்கள்.

வரும்வழியில் ரிட்டர்ன் ட்ரிப்புக்காக வீட்டை காலி செய்யும் சின்னி ஜெய்ந்த்தையும் ஆனந்தியும் ஏற்றி கொண்டு வருகிறார்கள்.

வீடு கிடைக்காமல் தவிக்கும் சின்னி ஜெய்ந்தால் இவர்கள் இடையே பிரச்சினை எழுகிறது.
இந்நிலையில் இவர்களுக்கும் போலீசுக்கும் தெரியாமல் இவர்களின் வண்டியில் தான் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை போட்டு பிறகு எடுத்துக் கொள்ளும் முடிவில் இவர்களை பின் தொடர்கிறார் ஹரிஷ் உத்தமன்.

அப்போது சின்னி ஜெயந்துக்கு மாரடைப்பு வர, வண்டியில் பணம் இருப்பது தெரிய வர, அந்த பணத்தை சிகிச்சைக்காக செலவு செய்துவிடுகின்றனர்.

இதன்பின்னர் ஹரிஷ் உத்தமன் அந்த பணத்தை திருப்பிக் கேட்க, இவர்கள் என்ன செய்தார்கள்? அந்த ரூபாய்யால் வரும் பிரச்சினைகள் என்ன? என்பதே மீதிக்கதை.

கயல் சந்திரன் ஒரு இடைவெளிக்கு பிறகு வந்தாலும் மீண்டும் ஒரு நல்ல படத்தோடு அதுமட்டும் இல்லாமல் மிகவும் யதார்த்தமான நடிப்பில் நம்மை கவர்ந்து இருக்கிறார். அதே போல அவர் நண்பனாக வரும் கிஷோர் அவரும் மிகவும் அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். காரணம் அவருக்கு நடிக்கும் வாய்ப்பை மிகவும் அருமையாக ஏற்படுத்தி கொடுத்துள்ளார் சந்திரன் தான் ஒரு நல்ல நடிகன் என்று மீண்டும் நிருபித்துள்ளார். சந்திரன் நிச்சயம் தமிழ் சினிமா அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் அதில் சந்தேகம் இல்லை

கயல் ஆனந்தி மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்று தன் தோன்றும் முதல் காட்சியில் இருந்து ஒவ்வொரு காட்சியிலும் நிருபித்துள்ளார் ஏழை பெண்ணாக வரும் ஆனந்தி புது உடைகள் பெரிய கடைகள் ஹோட்டல் போகும் போது ஒரு ஏழை பெண்ணின் மனபவாத்தை நடிப்பில் மிக அருமையாக வெளிபடுத்தியுள்ளார்.

சின்னி ஜெயந்த் நீண்ட இடைவெளிக்கு பின் திரையில் தோன்றினாலும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார் எப்பவும் செய்வது போல ஒரே நடிப்பை நடிக்காமல் இயக்குனரின் நடிகராக நடித்துள்ளார். என்று சொல்லணும்.

படத்தின் மிக முக்கிய பங்கு என்றால் இயக்குனர் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு மிக முக்கிய கதாபாத்திரம் தான் ஹாரிஸ் உத்தமன் கதாபாத்திரம் அதை உணர்ந்து நடித்துள்ளார். அவர் வந்தவுடன் லதைகலம் மிகவும் சுறுப்பாக நகரும் படம் ஹாரிஸ் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம்.

படத்தின் பலம் இயக்குனரின் திரைக்கதையும் அதேபோல இசை ஒளிப்பதிவு என எல்லோரும் மிகவும் சிறப்பாக செயப்பட்டு இருக்கின்றனர். இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணி தான் .

மொத்தத்தில் இந்த ருபாய் மதிப்பு அதிகம் Rank 3.5/5

Leave a Response