Friday, April 19
Shadow

துப்பறிவாளன் – திரைவிமர்சனம் (பிரமிக்கவைகிறான் ) Rank 3.5/5

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் சினிமாவில் வந்து இருக்கும் ஒரு துப்பறியும் கதை என்று தான் சொல்லணும் கதையில் பல இடியாப்ப சிக்கல் இருந்தாலும் திரைகதை தெளிந்த நீரோடை போல அமைத்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் படத்தின் மிக பெரிய பலம் திரைகதை அதே போல விஷால் இந்த கதைக்கு விஷால் தான் மிக பொருத்தம் என்றும் சொல்லலாம் அதே போல புதுமையான வினய் வித்தியாசமான அண்ட்ரியா கதாபாத்திரம் பிரசன்னா இவருக்கும் இது ஒரு புதுமை தான் எல்லாத்தையும் விட படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் பாக்யராஜ் முதல் முறையாக வில்லனாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நேர்த்தியாக தேர்வு செய்து படத்தை உருவாகியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்

கதைக்கும் கதபாதிரத்துக்கும் தேவையான பாத்திரங்களை மிக அழகா நேர்த்தியாக தேர்ந்த்டுத்து உள்ளார். சிம்ரன் படத்தில் ஒரு இரு காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார் அதேபோல ஜான் விஜய், நாயகி அணு இம்மானுவேல் தலைவாசல்விஜய், அபிஷேக், ரவிமரியா, ஜெயப்ரகாஷ்,அஜய் ரத்தினம்,எல்லோரும் தனக்கு கொடுத்த பங்கை மிக சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தின் துப்பறியும் நிபுணர் விஷால் தனக்கு எந்த வழக்கு சரி என்று படுதோ அந்த வழக்கை மட்டும் எடுத்து துப்பரிவார் பணத்துக்காக தன் மனசாட்சிக்கு தூரகமான வழக்கை எடுக்கமாட்டார் அப்படி வரும் ஒரு வழக்கு தான் ஒரு சிறுவன் தன் நாய் குட்டி இறந்துவிட்டது ஆனால் அந்த நாய்க்குட்டி கொலை செய்யப்பட்டுள்ளது அவனை நான் பார்க்கவேண்டும் என்று விஷாலிடம் வரும் ஒரு பள்ளி மாணவன் விஷாலின் நண்பன் பிரசன்னா டை இதெல்லாம் ஒரு கேஸ் என்று வந்துவிட்டாயா என்று சொல்லும் போது அந்த சிறுவன் இறந்த நாய் உடம்பில் இந்த குண்டு இருந்தது என்று கொடுக்க அங்கு இருந்து படத்தின் கதை ஆரம்பம் தொடர்கொலை யார் செய்கிறார்கள் எப்படி நடக்கிறது என்று போலீஸ் குழப்பத்தில் இருக்க விஷால் வேட்டை ஆரம்பம் ஆகிறது இதை யார் செய்கிறார்கள் என்பதை துப்பறிய ஆரம்பிக்கிறார் விஷால் இந்த தொடர் கொலைக்கும் நாய் கொலைக்கும் என்ன தொடர்வு யார் செய்கிறார்கள் என்பது தான் மீதி கதை

விஷால் அவன் இவன் படத்துக்கு பிறகு சவால் விடும் கதாபாத்திரம் அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார் ஒரு துப்பரிவாளன் போலவே கனகச்சிதமாக இருக்கிறார். சண்டைகாட்சிகள் பிரமிக்கவைதுள்ளர் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சண்டைகாட்சிகள் வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டை மற்றும் காட்சிகள் பிரமிக்கவைக்கிறார்.

விஷால் நண்பனாக வரும் பிரசன்னா படம் முழுக்க விஷாலுடன் வருகிறார் கொடுத்த பாத்திரத்தை மிக நேர்த்தியாக செய்துள்ளார். அதேபோல படத்தின் நாயகி அணு இம்மானுவேல் ஒரு பிக்பாக்கெட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்று தான் சொல்லணும் ஆனால் மிக அழகா இருக்கிறார் தமிழுக்கு கிடைத்த ஒரு நல்ல நாயகி என்று தான் சொல்லணும்

தமிழ் சினிமாவுக்கு இக பெரிய வில்லன் கிடைத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது இந்த மாதிரி ஒரு தோற்ற்றம் என்றால் ஹிந்தி நடிகரை தடறு இயக்குனர்கள் மத்தியில் வினய்யை தேர்ந்தடுத்த இயக்குனர் மிஷ்கினை கண்டிப்பாக பாராட்டனும் அற்புதமான குழந்தை தனமான முகத்தை வைத்து கொண்டு என்ன ஒரு கொடூரமான வில்லன்

பாக்யராஜ் இவரை வில்லன் என்று சொன்னால் நம்புவிர்களா ஆம் இவர் வில்லன் அதும் மிக மோசமாக கொலை செய்யும் வில்லனாக பாக்யராஜ் தான் ஒரு சிறந்த நடிகன் என்று மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார் ஒரு நடிகனுக்கு கதாபாத்திரம் தான் முக்கியம் என்று அதை உணர்ந்து நடித்துள்ளார்

முதல் முறையாக அண்ட்ரியா வில்லி அதுவும் அக்ஷன் வில்லி தன் உருவத்துக்கு ஏற்ப ஒரு பத்திரம் அதுக்கு ஏற்ப உடைகள் ஆங்கில படத்தில் வரும் பெண் போல ஒரு தோற்றம் அடேங்கப்பா என்று சொல்லும் அளவுக்கு மிரட்டி இருக்கிறார்.

இயக்குனர் மிஷ்கின் எப்பவும் போல ஒரு சைக்கோத்தனமான ஒரு கதை அதை தன் பாணியில் இருந்து சற்று விலகி வித்தியாசமாக திரைகதை மூலம் கொடுத்துள்ளார் எப்பவும் குத்து பாட்டை நம்பும் மிஷ்கின் இந்த படத்தில் கதையும் கதாபாத்திரத்தையும் நம்பி மிக நேர்த்தியான திரைகதை மூலம் சிறப்பான ஒரு படத்தை கொடுத்துள்ளார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் எல்லோரையும் பிரமிக்கவைக்கிறார் தமிழ் படமா இல்லை ஆங்கில படமா என்று சொல்லும் அளவுக்கு மிக அற்புதமான கிளைமாக்ஸ் கடைசி இருபது நிமிடம் படம் நாம் பார்ப்பது நிஜமா என்று பிரமிக்க வைக்கிறது

பட்டத்துக்கு மிக பெரிய பலம் ஒளிப்பதிவு கார்த்திக் அதேபோல பின்னணி இசை அர்ரோல் கரோலி மிக பெரிய பலம் என்று சொல்லணும் குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைகாட்சிகள் மிக அற்புதமாக படமாகியுள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் சில காட்சிகள் ஆப்ரிக்கா காடுகளில் படம் பிடித்தது போல உள்ளது

மொத்தத்தில் துப்பறிவாளன் நம் மனதுக்கு பிடித்தவன் Rank 3.5/5

Leave a Reply