‘விஷ்வகுரு’ திரைப்படம் புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது!!

share on:

• ஏவிஏ ப்ரொடக்ஷன், உலகிலேயே மிக விரைவாக எடுக்கப்பட்ட ‘விஷ்வகுரு’ திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப்பணிகள் முடிந்து ஷூட்டிங் முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணி நேரம் 2 நிமிடங்களில் முடித்து புதிய கின்னஸ் சாதனையைப் படத்திருக்கிறது ‘விஷ்வகுரு’.
சென்னை, 29 மார்ச் 2018 – ஏவிஏ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் டாக்டர். ஏ.வி.அனுப் தயாரித்து இருக்கும் புதிய திரைப்படம் ‘விஷ்வகுரு’, இப்படத்தின் மூலம் ஏவி. அனுப் மற்றும் அப்படத்தின் இயக்குநர் திரு. விஜேஷ் மணி புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப்பணிகள் முடிந்து ஹூட்டிங் ஆரம்பித்த முதல் திரையிடல் வரையிலான அனைத்து பணிகளையும் 51 மணி நேரம் 2 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். இதனால் உலகிலேயே மிக வேகமாக எடுத்துமுடிக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையை ‘விஷ்வகுரு’ படைத்திருக்கிறது ‘விஷ்வகுரு’ படமானது, இந்தியாவில் மாபெரும் சமூகச்சீர்திருத்தங்களைக் கொண்டு வரக்காரணமாக இருந்தவரும், கேரளாவில் மதம், ஜாதிகளையெல்லாம் தாண்டி மாபெரும் சமூகச் சீர்திருத்தங்களை கொண்டுவந்து, ஆன்மீக சுதந்திரத்தையும் சமூக சமத்துவத்தையும் உருவாக்கிய ‘ஸ்ரீ நாராயண குரு’ அவர்களின் வாழ்க்கையைக் காட்டும் ‘பயோ பிக்’ [biopic] பிரிவிலான திரைப்படமாகும்.

இதற்கு முன்பு ‘மங்களகமனா’ [MangalaGamana] என்ற இலங்கை திரைப்படம், 71 மணிநேரம் மற்றும் 10 நிமிடங்களில் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. வெறும் 51 மணிநேரம் மற்றும் 2 நிமிடங்களில் ’விஷ்வகுரு’ எடுக்கப்பட்டிருப்பதால், உலகில் மிக வேகமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது.

இப்படத்தின் எழுத்தாளர் ப்ரமோத் பையனூர் எழுத்துப்பணிகளை 27, டிசம்பர் 2017 அன்று முழுமையாக எழுதி முடித்த இரண்டு நாட்களிலேயே எடுத்துமுடிக்கப்பட்டு, அதாவது 29 டிசம்பர் 2017 அன்று திருவனந்தபுரத்திலுள்ள ’நிலா திரையங்கில்’ காலை 11.30 மணிக்கு திரையிடப்பட்டது. ‘விஷ்வகுரு’ திரைப்படத்தின் ஷூட்டிங் மட்டுடுமின்றி, படத்தலைப்பு முன்பதிவு, போஸ்ட்ப்ரொடக்ஷன் பணிகள், சுவரொட்டிகளுக்கான வடிவமைப்பு, விளம்பரங்கள் மற்றும் தணிக்கை முதல் அனைத்துப் பணிகளும் இந்த மிகக்குறைவான மணிநேரங்களுக்காகவே முடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏ,வி,அனுப், மலையாள சினிமாவில் அதிகம் பணியாற்றிய அனுபவமுள்ளவர். முழு அர்ப்பணிப்புடன் கூடிய மேடை நாடக நட்சத்திரம். இவர் ‘விஷ்வகுரு’ படம் பற்றி கூறுகையில், ‘’இந்திய சினிமாவை உலகளாவிய சினிமாவில் குறிப்பிட்டு காட்டும் வகையில் ஒரு மைல்கல்லை எட்டவேண்டுமென்ற எண்ணத்தில் உருவானதுதான் இப்படம். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மணி நேரத்தில், மேடை நாடக நட்சத்திரங்களின் பங்களிப்புடன் இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். நாங்கள் எதற்காக ஒரு நல்ல முயற்சியுடன் இறங்கியிருக்கிறோம் என்பதை மக்கள் எப்படி புரிந்துகொள்வது மிகவும்முக்கியம்’’ என்றார்.

இப்படத்தின் இயக்குநர் விஜேஷ் மணி கூறுகையில், ‘’நம் சினிமாவின் மீது உலகளாவிய ஒரு கவன ஈர்ப்பை உருவாக்கவேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடே ’விஷ்வகுரு’. உலகளவில் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென நினைத்தபோது, நட்சத்திரங்கள், திரைப்பட பணியாளர்கள் என அனைத்திலும் கைக்கொடுத்து அதை நிஜமாக்கிய ஏ.வி.அனுப் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகள்’’ என்றார்.
’விஷ்வகுரு’ திரைப்படத்தில் புருஷோத்தமன் கைனக்கரா, காந்தியன் சிவராமன், கலாதரன், கலாநிலையம் ராமச்சந்திரன், ஹரிகிருஷ்ணன், கே.பி.ஏ.சி. லீலா கிருஷ்ணன், பி.குரியன், ஷெஜின், பேபி பவித்ரா, மாஸ்டர் ஷரன் ஆகிய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேக்கப் ஆர்டிஸ்ட் பட்டனம் ரஷீத். கலை இயக்குநர் அர்கன். பின்னணி இசை கிளிமனூர் ராமவர்மா, படத்தொகுப்பு லிபின். தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஷாகுல் ஹமீத். ஒளிப்பதிவு லோகநாதன் ஸ்ரீனிவாசன், இப்படத்தின் முக்கிய காட்சிகள் சிவகிரி மடத்திலும், அதற்கு அருகிலுள்ள முக்கிய இடங்களிலும் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

’கின்னஸ் வேர்ல்ட் ரிக்கார்ஸ்’ குறித்து…

‘கின்னஸ் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ்’, உலகளவில் நிகழ்த்தப்படும் வரலாற்றை மாற்றியமைக்கும் சாதனைகளுக்கான வெற்றிகளுக்கான அங்கீகாரத்தை அளிக்கும் உலகளவிலான உச்ச அமைப்பாக திகழ்கிறது. கின்னல் உலக சாதனைகள் உலகளாவிய நிகழ்ச்சிகள், உலகம் முழுவதிலும் வருடத்திற்கு 750 மில்லியன் மக்களைச் சென்றடைகிறது. கின்னஸ் உலக சாதனைகளின் யூட்யூப் சேனல், 1.3 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் முன்னணி சேனலாக திகழ்கிறது. இது வருடத்திற்கு 300 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. மேலும் கின்னஸ் உலக சாதனைகள் இணையதளமானது, வருடத்திற்கு 18 மில்லியனுக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களைப் பெற்றிருக்கிறது. இவை தவிர்த்து இதன் ஃபேஸ்புக் கணக்கிற்கு 12 மில்லியன் ரசிகர்களையும் கொண்டிருக்கிறது.

ஏவிஏ ப்ரொடக்ஷன்ஸ் குறித்து…

ஏவிஏ ப்ரொடக்ஷன்ஸ், கலை மீது தீவிரமான ஆர்வம் கொண்ட தயாரிப்பு நிறுவனமாகும். திரைப்படம் என்பது ஒரு கலை, அது நம் சமூகத்தின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும் சினிமா பல பரிமாணங்களில் தன்னுடைய நல்ல பங்களிப்பை சமூகத்திற்கு அளித்து வருகிறது என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது. 2007-ல் தனது திரைப்பட பயணத்தை ஆரம்பித்த ஏவிஏ ப்ரொடக்ஷன்ஸ், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களை விநியோகம் செய்திருக்கிறது. ஏவிஏ ப்ரொடக்ஷன்ஸ் தனது செயல்பாடுகளால் வளர்ச்சிக் கண்டதுடன், உலகளாவியச் சந்தையில் தன் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் வகையில் பல ஆங்கிலப்படங்களின் வெளியீடுகளை மேற்கொண்டிருக்கிறது. சமூகத்திற்கு பொழுதுப்போக்குடன், அத்தியாவசியமான செய்தியையும் கலந்து, மூத்த நட்சத்திரக் கலைஞர்கள் மற்றும் சாதிக்கத் துடுக்கும் இளையதலைமுறையினருடனும் கைக்கோர்த்து திரைப்படங்களை அளிப்பதில் ஆர்வத்துடன் களமிறங்கியிருக்கிறது. ஏவிஏ ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த பல திரைப்படங்கள், ஃபெஸ்டிவல் டி கான்ஸ் போன்ற சர்வதேச விருதுகளையும், தேசிய திரைப்பட விருது, கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள், ராமுகரியத் விருது, விஜய் விருது என பல விருதுகளையும் பெற்றிருக்கும் தயாரிப்பு நிறுவனமாகும்.