கதை கேட்காமல் படம் நடித்தேன் என்று சொல்லும்பொழுதே சுதாரித்து இருந்து இருக்க வேண்டும் ரசிக பெரு மக்களே
“இந்த கதையை கேட்காமலே இருந்து இருக்கலாம்” திரையரங்கத்தில் ரசிகர்களின் முனு முனுப்பு..!
படத்தின் கதை
தனுஷ் ரயிலில் கேண்டின் பாயாக வேலை செய்ய, அதே ரயிலில் ஒரு ஹீரோயினின் டச்சப் கேர்ளாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். பிரபு சாலமன் படம் என்றாலே பார்த்தவுடன் காதல் தீப்பிடிக்க, அதன் பிறகு ‘என் உடம்புக்குள்ள புகுந்து என் உசுர எடுத்துட்ட’ன்ற வசனத்துடன் ஒரு காதல் வரும், அதே காதல் தான் இதிலும்.
கீர்த்தி சுரேஷிற்கு பெரிய பாடகி ஆக வேண்டும் என்று ஆசை. இவருடைய ஆசையை தெரிந்த தனுஷ் நெருங்கி பழக விருப்பப்பட்டு, எனக்கு வைரமுத்துவை தெரியும் என்று பொய் சொல்லி பழகுகிறார்.
ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து இருவரும் பிரிய, அதே நேரத்தில் என்ஜின் மாஸ்டர் நெஞ்சு வலியில் இறக்க, ரயில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றது அதன்பின் தனுஷ்-கீர்த்தி சுரேஷ் ஜோடி காதல் சேர்ந்ததா? அந்த ரயில் நின்றதா? என்பதை சீட்டின் நுனிக்கு கொண்டு வருகிறது திரைக்கதை.
படம் பார்பவர்களுக்கு ஒரே சந்தோஷம்
படத்தின் இரண்டாம் பாதி, திரைக்கதை, காமெடி காட்சிகள் அட்டகாசம் கிளைமேக்ஸ் என்ன ஆகும் என்று ஆடியன்ஸை நகம் கடிக்க வைக்கின்றது
மொத்தத்தில்…
2 மணி நேரத்தில் பரபரப்பாக சொல்ல வேண்டிய ஒரு கதையை, கொஞ்சம் நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார் பிரபுசாலமன். இருந்தபோதும், படத்தின் இரண்டாம்பாதியை சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் உருவாக்கி முதல்பாதியில் ஏற்பட்ட அலுப்பை மறக்கச் செய்திருக்கிறார். படத்தின் நீளத்தைக் குறைத்து, இன்னும் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியிருந்தால் ‘தொடரி’யின் முழுப்பயணமும் திருப்தியாக இருந்திருக்கும்.