அன்னை ௨தவும் கரங்கள் அறக்கட்டளையின் மூலம் 25/09/2016 அன்று இரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் பதிவு முகாம், சென்னை 12, கன்னிகாபுரத்தில் ௨ள்ள அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் அன்னை உதவும் கரங்கள் நிறுவனர் செல்வி. P. புவனேஸ்வரி, மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு. K. ஜோஷி நிர்மல் குமார், IPS., காவல்துறை இணை ஆணையர்-வடசென்னை, திரு. பூங்கா பாக்கியராஜ், வழக்கறிஞர் சென்னை ௨யர்நீதிமன்றம், திரு. டாக்டர். B. தணிகையரசு , ௨தவி பேராசிரியர், இவர்கள் தலைமையேற்று முகாமை துவக்கி வைத்தனர். 100 க்கும் மேற்பட்டவர்கள் இரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் பதிவு செய்தனர்.