
R j மீடியா கிரியேஷன் சார்பில் குமரேஷ் குமார் இயக்கத்தில் ராம்கி நடிக்கும் திரைப்படம் ஆங்கிலப்படம். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள பிரசாத் லேப்-ல் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் ராதாரவி,பவர் ஸ்டார், இயக்குநர்கள் RV உதயகுமார், பேரரசு மற்றும் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி (எ) நட்ராஜ் கலந்துகொண்டனர். அவர்கள் திரைப்படத்தையும், திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை வாழ்த்தி பேசினர் அவை பின்வருமாறு,
ராதாரவி பேசுகையில்,
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் பெருமளவில் வெற்றிபெற்றுவிடுகிறது, இருப்பினும் இது சினிமாவுக்கு முக்கியமல்ல ஏனெனில் மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் உருவாக குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வருடங்களாகும், ஏனெனில் ஹீரோ கால்ஷீட், இசையமைப்பாளர் கால்ஷீட், இயக்குனர் கால்ஷீட் என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஆனால் சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றிபெற்றால்தான் தொடர்ந்து படமெடுப்பார்கள், அதன்மூலம் பல்வேறு கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமென்று கூறினார். மேலும் தியேட்டர் உரிமையாளர்களை சிறிய பட்ஜெட் படங்களையும் திரையிடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மேலும் சால்ட் அண்ட் பேப்பர் ஸ்டைல் ரஜினி, அஜித்திற்கு அடுத்ததாக ராம்கிக்கு மிகவும் பொருத்தமாக உள்ளதாக கூறினார்.
பேரரசு பேசுகையில்,
தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் சிவப்பாக இருந்தால் அவர்கள் LOVERBOY என்ற இமேஜ் வைத்துவிடுவார்கள், ஆனால் ராம்கி மட்டுமே சிவாப்பாக இருந்து ஆக்க்ஷன் ஹீரோவானவர்,மேலும் கிராமத்தில் பல்வேறு திறமையான இளைஞர்கள் உள்ளார்கள் அவர்களை தமிழ் சினிமாவில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தார். மேலும் நட்டியை கதாநாயகனாக வைத்து விரைவில் படம் எடுக்கப்போவதாக தகவல் வெளியிட்டார்.
RV உதயகுமார் பேசுகையில்,
தமிழ் சினிமாவில் திரைப்படத்தில் வேகத்தை மக்கள் விரும்புகிறார்கள், உணர்ச்சிபூர்வமான படங்களை விரும்புவதில்லை என்றார். மேலும் பாடல்வரிகளில் ஆங்கில வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறர்கள், தமிழ் சொற்களை பயன்படுத்துவதில்லை என்றும், இளம் இசையமைப்பாளர்கள் தமிழ் சொற்களை பாடல்வரிகளில் பயன்படுத்தவேண்டுமென்று கூறினார். மேலும் ஜாதி மதம் என எவ்வித வேறுபாடுமின்றி எந்நாட்டவரையும் வாழ வைக்கும் ஒரே நாடு தமிழ்நாடு என உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
நட்டி பேசுகையில்,
திரைப்பட கல்லூரி மாணவர்கள் பிரம்மாண்ட திரைப்படங்களை மட்டுமே எடுக்கமுடியும் உணர்ச்சிபூர்வமான படங்களை எடுக்க முடியாது என்ற இமேஜ் -யை தகர்த்தெறிந்தவர் திரு R V உதயகுமார் என்று புகழ்ந்து பேசினார், மேலும் ஆங்கிலத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்,நடிகைகளுக்கும் ,பிற கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
பவர்ஸ்டார் பேசுகையில்,
ஆங்கிலபடத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மிகவும் திறமையானவர்கள் என்றும் மேலும் இது போன்ற திறமையான கலைஞர்கள் தனது திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை என்றும் இருப்பினும் எதிர்காலத்தில் தனது திரைப்படத்தில் கண்டிப்பாக பயன்படுத்துவேன் என்று கூறினார்.மேலும் அவர் ராம்கியின் ஹேர் ஸ்டைல் பார்த்தால் தனக்கு பொறாமையாக இருப்பதாகவும்