Saturday, December 14
Shadow

ஆஸ்கார் மேடையில் இடம் பிடிக்குமா தனுஷ் கூட்டணி!!

இன்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெருமைக்குரிய ஒரு செய்தி கிடைத்துள்ளது.

வெற்றி மாறன் உடன் தனுஷ் கூட்டணி என்றாலே அதில் எப்போதும் பல விருந்து இருக்கும் அதை மீண்டும் நிருபித்து கடந்த வருடம் வெளியான விசாரணை..,

ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே பல விருது விழாக்களில் கலந்துகொண்டு, ரிலீஸ் சமயத்தில் விமர்சனரீதியாக பாராட்டுக்களை அள்ளிக்குவித்து, ரிலீஸுக்குப் பிறகும் விருதுகளைக் குவித்தால் அது எத்தனை பெரிய சாதனை.

அப்படிப்பட்ட சாதனைக்குச் சொந்தமான சொற்ப படங்களின் பட்டியலில் வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படத்திற்கும் தாராளமாக இடமுண்டு. ஏற்கெனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், 3 தேசிய விருதுகளையும் வென்று அசத்தியது விசாரணை திரைப்படம். இப்போது அந்த புகழ் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக, இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் படமாக ‘விசாரணை’ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியை கேட்டு அனைவரும் வெற்றிமாறனுக்கு , தனுஷ்க்கும் வாழ்த்துக்கள் சொல்லிய வண்ணம் உள்ளனர்.

Leave a Reply