ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 300 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரஜினி உடல்நிலை சரியாகி திரும்பி இருப்பதால் அவரும், ஏமி ஜாக்சனும் சம்பந்தப்பட்ட காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.
இந்நிலையில், ‘2.0’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது உண்மையானது தானா என்பது குறித்து கருத்துக் கூறாமல் அமைதி காத்து வருகிறது படக்குழு.
‘2.0’ பர்ஸ்ட் லுக்கை நவம்பரில் அதிகார்பூர்வமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.