Tuesday, October 8
Shadow

‘இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ – அஜித்திற்கு பட்டம் கொடுத்த பிரபல வெளிநாட்டு ஊடகம்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என ஒருசில நடிகர்கள் போட்டியில் இருக்கும்போது எப்போதுமே அடைமொழியை விரும்பாத அஜித்துக்கு தற்போது வெளிநாட்டு ஊடகம் ஒன்று இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் என்ற பட்டத்தை கொடுத்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளது

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஆஸ்திரியாவின் உள்ள carinthia என்ற பகுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பு குறித்து carinthia நகரின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின் தலைப்பே அஜித் ஒரு இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் என்பதுதான். அந்த செய்தியில் இந்திய நடிகர் அஜித்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடைபெற்று வருவதாகவும் இந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகிய இவர் சில்வஸ்டருக்கு நிகரான புகழை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.

அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், கருணாகரன் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித் இண்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார்.

Leave a Reply