இளையதளபதி விஜய்யின் பைரவா படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் விஜய்யும் படக்குழுவினருக்கு தங்க செயின் பரிசளித்திருந்தார். அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அருமையான பரிசளித்த இளையதளபதி விஜய் அவர்களுக்கு மிகவும் நன்றி. தங்க செயின் நன்றாக இருக்கிறது, எதிர்காலத்தில் இதுபோன்ற பரிசை பெற நிறைய படங்கள் செய்வோம் என்றிருக்கிறார்.