எழில் இயக்கத்தில் உதயநிதி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான பல நாட்கள் ஆகியும், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை நாளை முதல் தொடங்கவிருக்கின்றனர்.
இதனை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். இப்படத்தில் காமெடி வேடத்தில் சூரி நடிக்கவிருக்கிறார். உதயநிதி-சூரி இணையவிருக்கும் முதல் படம் இதுதான். இந்த படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கவிருக்கும் படத்திலும் சூரி நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரெஜினா, சிருஷ்டி டாங்கே என இரண்டு பேர் இப்படத்தின் கதாநாயகிகளாக தேர்வாகியுள்ளார். டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். எழில் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் வெற்றிநடை போட்டது.
அதேபோல், உதயநிதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘மனிதன்’ படமும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இருவரும் இணையும் இந்த புதிய படம் ரசிகர்ளுக்கு விருந்தாக இருக்கும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.