Tuesday, December 3
Shadow

கணேஷ் பிரசாத்தின் ‘எனது இந்தியா’ என்னும் மியூசிக் வீடியோ ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது…

“அசோக சக்கரம் பறக்குதடா, காணும் கண்களை பறிக்குதடா….” என்ற ‘எனது இந்தியா’ மியூசிக் வீடியோவின்  வரிகளை  கேட்கும் போது, நம்மை அறியாமலேயே நம் உடம்பில் ஒருவித நாட்டுப்பற்று குடிக்கொள்கிறது. கணேஷ் பிரசாத்தின் ‘எனது இந்தியா’  என்னும் இந்த பாடலானது, நம் இந்தியா 70 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த மியூசிக் வீடியோவானது ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை  ‘யூடூப்பில்’ எட்டி உள்ளது. வெகு குறைந்த நாட்களிலேயே இவ்வளவு பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை இந்த  ‘எனது இந்தியா’ பாடல் திரட்டி இருப்பது முற்றிலும் சிறப்பு.
 
 
டாக்டர் எஸ் செல்வமுத்து மற்றும் மஞ்சுநாத் தயாரிப்பில் உருவாகிய ‘எனது இந்தியா’ மியூசிக் வீடியோவிற்கு பாடல் வரிகள் எழுதி இயக்கி இருக்கிறார் ஏ.ஆர். பரத் குமார். மஸ்தான் மற்றும் கேதரின் நாட்டுப்பற்று மிக்க இசையில் உருவாகி இருக்கும் ‘எனது இந்தியா’  பாடலை பாடியுள்ளனர் பாடகர்கள் மனோ, நித்யஸ்ரீ மகாதேவன், முகேஷ் மற்றும் அபே ஜோத்புர்கார். நம் பாரத தாய்க்கு நன்றி சொல்லி அவர்களை புகழும் விதத்தில் அமைந்திருக்கும் இந்த மியூசிக் வீடியோவில் கணேஷ் பிரசாத் (இந்த மியூசிக் வீடியோவின் நிர்வாக தயாரிப்பாளர்), நடிகை இனியா, மனோ, நித்யஸ்ரீ, முகேஷ், அபே ஜோத்புர்கார், கேதர் மற்றும் மஸ்தான் ஆகியோர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்தியனாக இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்…’ என்ற கருத்தை பார்ப்பவர்களின் நரம்பில் புகுத்துகிறது இந்த ‘எனது இந்தியா’ மியூசிக் வீடியோ.

Leave a Reply