
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குநர் கண்ணன். கெளதம் கார்த்திக், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.
வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு செல்வா எடிட்டிங் பணிகளை கவனிக்க இருக்கிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்க இருக்கிறார். ஆஷா ஸ்ரீ தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டது.
தலைப்பிடப்படாமல் இருந்த இப்படத்துக்கு ‘இவன் தந்திரன்’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சூர்யா வெளியிட்டார். சென்னையிலே இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.