R. கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நாயகன் – “இவன் தந்திரன்”
R.கண்ணன் இயக்க உள்ள புதிய படத்தில் கவுதம் கார்த்திக்கின் ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒபந்தம் செய்யப்பட்டுள்ளார் .
இவர் கன்னடத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற “யு – டர்ன்” படத்தின் நாயகி ஆவார். இதுபற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது,”கதாநாயகன், நாயகி உள்ளிட்ட கதாபாதிரங்கள்போல் இப்படத்தில் மழையும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வெளிப்படும்.
அதனால்தான் 8 மாதங்கள் காத்திருந்து அக்டோபர்,நவம்பரில் படப்பிடிப்பை தொடர்ச்சியாக நடத்த உள்ளார். நாயகன் முடிவான பிறகு,நாயகி கதாபாத்திரத்துக்கு பலக்கட்ட தேர்வுகள் நடத்தினோம்.கடைசியாக,ஒரு நடிகையாக அல்லாமல் அந்த கதாபாத்திரமாகவே பிரதிபலித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். R.J.பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
“இது காதல் கலந்து ஆக்ஷன் காமெடியுடன் இருக்கும்”
படபிடிப்பு வரும் அக்டோபர் 12- ம் தேதி தொடங்கி சென்னையில் ஒரு மாதம் முழுவதும் நடைபெற உள்ளது