
இருமுகன் படத்தை அடுத்து விக்ரம் நடிக்கயிருந்த படம் கருடா. இந்த படத்தை திரு இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்கும், தயாரிப்பாளருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினையால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆனபோதும், விக்ரமிற்கு அட்வான்ஸ் கொடுத்து அவரிடம் வாங்கிய கால்சீட் டை அப்படியேதான் வைத்திருக்கிறார்களாம். அதனால், இப்போது வேறொரு இயக்குனர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கயிருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், கருடா படத்தில் தான் முதன்முறையாக விக்ரமுடன் இணையவிருந்தார் காஜல் அகர்வால். ஆனால், புதிதாக அவர்கள் ரெடி பண்ணியுள்ள கதைக்கு அவர் பொருந்த மாட்டாராம். அதனால் காஜல் அகர்வாலை நீக்கி விட்டு, மார்க்கெட்டில் இருக்கும் வேறு சில நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வருகிறார்கள். அதோடு, அடுத்தபடியாக ஹரி இயக்கத்தில் சாமி-2வில் தான் விக்ரம் நடிப்பார் என்று கூறப்பட்டபோதும், அதற்கு முன்னதாகவே இந்த படம் தொடங்கி விடும் என்கிறார்கள்.