நடிகர் ஷாம் தற்போது “2M cinemas” K.V. சபரீஷ் தயாரிப்பில் பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் கா-வியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க பிரம்மிப்பின் தலைநகரமான “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) படமாக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் இப்படத்துக்காக சண்டை பயிற்சியாளர் STUN சிவா தலைமையில் ஒரு அதி பயங்கர கார் சேஸிங் சண்டைக்காட்சி, லாஸ் வேகாஸில் மக்கள் அதிகம் கூடும் வீதிகளில் பரபரப்பாக படமாகியுள்ளது. STUN சிவா கடும் ரிஸ்க் எடுத்து ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த சண்டைக்காட்சி படம் வெளியானதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.
தற்போது வெளியாகி ஓடிகொண்டிருக்கும் தொடரி படத்தை பார்த்தவர்கள், STUN சிவாவின் அதிரவைக்கும் சண்டைக்காட்சிகளை பார்த்து மிரண்டுபோய் உள்ளனர். அந்தவகையில் காவியன் படத்திலும் இவரது சண்டைக்காட்சிகள் பெரிதளவில் பேசப்படும் என கூறப்படுகிறது.
ஷாம் ஜோடியாக ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் கோலிவுட் மற்றும் ஹாலிவுட்டை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள். N.S. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவில்ஷ்யாம் மோகன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.