Saturday, October 12
Shadow

‘குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸுக்கு’ தேர்ந்தெடுக்க பட்டுள்ள இளம் இசையமைப்பாளர்கள் விஷால் – ஆதித்யா மற்றும் ஷங்கர் எஹசான்

சென்னையை சார்ந்த இளம் இசையமைப்பாளர்கள் விஷால் – ஆதித்யா மற்றும் ஷங்கர் எஹசான் ஆகியோர் ‘குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸுக்கு’ தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர் என்று கடந்த ஜூன் 8 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த கூட்டணியானது தாங்கள் இசையமைத்த ‘பலோபாஷா’ பாடலுக்கு ‘சோசியல் ஸ்டார்’ என்னும் விருதை தட்டிச் சென்றுள்ளனர். சாய்சரண் மற்றும் வைஷாலி குரலில் உதயமாகி, மனித உணர்வுகளையும், அன்பு – அமைதி ஆகிய குணங்களையும் உள்ளடக்கி இருக்கும் இந்த ‘பாலோபாஷா’ பாடலானது தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது மேலும் சிறப்பு. இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் – ஆதித்யா கூட்டணி மட்டும் தான் இந்த ‘குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸ்’ (GPSA) விழாவில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸ்’ (GPSA) பற்றி: ProjectPeaceOnEarth.org நிறுவனத்தின் நிறுவுனர் ஸ்டீவ் ராபர்ட்சன் அவர்களின் சிந்தனையில் உருவானது தான் இந்த ‘குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸ்’ (GPSA). உலக அமைதிக்காக பல இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் பாடல்கள் மற்றும் காணொளிகளை மையமாக கொண்டு இந்த ‘குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸ்’ என்னும் மாபெரும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காக இப்படி ஒரு மாபெரும் இசையை போட்டியை நடத்தும் பெருமை காலிஃபோர்னியாவை மையமாக கொண்டு செயல்படும் இந்த ProjectPeaceOnEarth.org நிறுவனத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. பாரெங்கும் உள்ள பல திறமைபடைத்த இசை கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது தான் இந்த போட்டியின் முக்கிய குறிக்கோளாக இருந்து வருகிறது.

‘குளோபல் பீஸ் சாங் அவார்ட்ஸ்’ (GPSA) போட்டியின் புகழ் பெற்ற நடுவர்கள்:

1. ஸ்டீவர்ட் கோப்லேண்ட்(கிராமிய விருது பெற்றவர் – தி போலீஸ்)
2. ராண்டி கோப்பஸ் (நியூ ஏஜ் குரூப் 2002)
3. ஜோனாதன் எலியாஸ் (எலியாஸ் கலை/தி பிரேயர் சைக்கிள் ஆல்பம்)
4. டேவிட் ஜாய்ஸ் (ஜாஸ் பாடகர் குழுவிற்காக கிராமிய விருது பெற்றவர்)
5. ரிக்கி கேஜ் (2014 நியூ ஏஜ் கிராமிய விருது பெற்றவர்)
6. டிம் கிரிங் (தொலைக்காட்சி தயாரிப்பாளர் – டச் & ஹீரோஸ்)
7. டென்னிஸ் குசினிச் (அமெரிக்காவின் முன்னாள் பிரதிநிதி/ அமெரிக்காவின் சமாதான துறை)
8. பிலிப் லாரன்ஸ் (கிராமிய விருது பெற்றவர் – புருனோ மார்ஸ்)
9. ரோட் லின்னும் (யுனிவர்சல் மியூசிக்கின் முன்னாள் நிர்வாக துணை தலைவர்)
10. கேரி நிக்கல்சன் (கிராமிய விருது பெற்றவர் மற்றும் டெக்சாஸ் ஹால் ஆப் பேம் – பாடலாசிரியர்/பாடகர்)
11. ஸ்டீவ் ராபர்ட்சன் ( ProjectPeaceOnEarth.org நிறுவனத்தின் நிறுவுனர்)
12. ஜோஹானே ஷேணன்டொச் ( கிராமிய விருது பெற்றவர் – அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர்)
13. ரால்ப் சைமன் (மொபிலியம் குளோபல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்)
14. பீட்டர் யர்ரோவ் (பழம்பெரும் நாட்டுப்புற பாடகர் மற்றும் பீட்டர், பவுல், மேரி நிறுவனத்தின் சமாதான ஆர்வலர்

Leave a Reply