Friday, June 2
Shadow

கெட்டப்பை மாற்றினாலும் காமெடியை விடாத கவுண்டமணி

பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் ரஜினியின் நண்பராக நடித்தவர் கவுண்டமணி. அந்த வகையில், கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார் கவுண்டமணி.

காமெடி மட்டுமின்றி, குணசித்ர வேடங்களிலும் கலக்கிய அவர், 49ஓ படத்தை அடுத்து எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்திலும் நாயகனாக நடித்துள்ளார்.

முன்னதாக, சாந் தனு நாயகனாக நடித்துள்ள வாய்மை என்ற படத்தில் ஒரு முக்கியமான கேரக்ட ரில் நடித்துள்ளார் கவுண்டமணி.

இந்த படத்தைப் பொறுத்தவரை முதன்முறையாக கோட்சூட் அணிந்த ஒரு டீசன்டான ரோலில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. சில இடங்களில் எமோசனலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தபோதும், வெடிச்சிரிப்பு காமெடி களையும் ஆங்காங்கே தெளித்து விட்டிருக்கிறாராம் கவுண்டமணி.

ஆக, கோட்சூட் அணிந்து அவரது கெட்டப்பை டோட்டலாக மாற்றி விட்டபோதும், தன்னிடம் ரசிகர்களை காமெடியைத்தான் எதிர்பார்ப்பார்கள் என்பதால், தனக்கு கண்டிப்பாக காமெடி கலந்த டயலாக்குகள் இருக்க வேண்டும் என்று முன் கூட்டியே சொல்லியே அந்த ரோலில் நடிக்க கமிட்டானாராம் கவுண்டமணி.

Leave a Reply