Saturday, April 26
Shadow

க்ரைம் திரில்லர் கதைக்கு தயாராகும் விதார்த்

காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் குற்றமே தண்டனை படத்தில் நடித்து விட்டார் விதார்த். இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா திவாரியா, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

க்ரைம் திரில்லர் கதையில் தயாராகியுள்ள இந்த படத்தை அடுத்து தனது புதிய படத்தில் நடிப்பதற்கும் தயாராகி விட்டார் விதார்த்.

ஆனால், அந்த படத்தில் நடிக்கவிருக்கும் அருந்ததி நாயர் தற்போது சைத்தான், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் அவருக்காக வெயிட்டிங்கில் இருக்கிறாராம் விதார்த்.

சைத்தானில் சிங்கிள் ஹீரோயினாக நடித்துள்ள அருந்ததி நாயர், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் அதர்வாவின் காதலியாக நடிக்கிறார்.

இதேபடத்தில் ரெஜினா, பிரணிதா ஆகியோரும் நடித்தபோதும், அருந்ததி நாயருக்கே முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனால் அந்த படத்திற்கு அதிக நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்து வருகிறாராம் அருந்ததி நாயர்.

இதற்கிடையே சைத்தான் படத்திலும் அருந்ததி நாயர் தற்போது நடித்துக்கொண்டிருப்பதால், இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் அடுத்த மாதம் 15ஆந் திகதி  வரை நடக்கிறதாம். அதனால் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் 20ஆந் திகதி  தொடங்குகிறார் விதார்த்.

Leave a Reply