கடந்த ஞாயிற்று கிழமை நடந்த ரிட்ஸ் சவுத் ஸ்கோப் லைப் ஸ்டைல் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு “ Most Bankabale Young Actor “ என்னும் விருது வழங்கப்பட்டது. இவ்வருடத்தில் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்துக்கொண்டு இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி கதை தேர்விலும் , தேர்வு செய்த கதையிலும் அதிக கவனம் செலுத்தி அதை சிறப்பாக செய்து வருகிறார். இதை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நடிகர் விஜய் சேதுபதி அவருடன் செல்பி எடுக்க கூடி இருந்த ரசிகர்கள் அனைவருடனும் சேர்ந்து நின்று செல்பி எடுத்துக்கொண்டார். சவுத் ஸ்கோப் தங்களுடைய இதழுக்காக இயக்குநர் , அனிமேஷன் துறையில் ஆற்றல் மிக்கவர் என பன்முகம் கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களை வைத்து உருவாக்கிய ரிட்ஸ் இதழின் கவரையும் , நடிகை சமந்தாவின் புகைப்பட கவரையும் அன்று வெளியிட்டனர்.
விழாவிற்கு திருமதி. லதா ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா தனுஷ் , சௌந்தர்யா ரஜினிகாந்த் , ஸ்ரியா ரெட்டி , தேசிய விருது பெற்ற உடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி , அணுவரதன் , சுமா ஹாரிஸ் , ப்ரீதா ஹரி ஆகியோர் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர்.
நடிகைகள் ராஷி கண்ணா , சஞ்சனா மற்றும் டானியா ஆகியோர் விழாவில் டிபாரா போட்டிக் நிறுவனத்துக்காகராம்ப் வாக் நடந்தனர். அதை தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா , தர்ஷனா , சுமன் வூரா , ஜார்ஜ் சேரின் மற்றும் பரத் ராஜ் ஆகியோர் that1too.comநிறுவனத்துக்காக ராம்ப் வாக் நடந்தனர்.