Saturday, October 12
Shadow

சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு ஒரு செய்தி

fingertipscinema.com என்ற இணையதளத்தின் துவக்கவிழா RKV ஸ்டுடியோவில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் s .ve .சேகர்,தங்கசாமி,இரத்தின சிவாவும் இவர்களோடு ARK ராஜராஜன்,காளிவெங்கட்,சௌந்தர்ராஜன் மற்றும் இணையதள உரிமையாளர் ரமா சூரியநாராயணன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் எஸ்.வி சேகர் பேசுகையில்,

இந்த இணையதளம் சினிமா வாய்ப்பு தேடும் அனைவருக்கும் ஒரு சிறந்த கருவியாக விளங்கும் இப்படி ஒரு முயற்சியை எடுத்ததற்காக பிரகாஷ்யை பாராட்டுகிறேன். இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது இனிவரும் காலங்களின் இணையதளமின்றி சினிமா இயங்க முடியாது, ஏன் திரைப்படங்களே இணையதளத்தில் வெளியிடப்படலாம். இக்காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடும் நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்காக அடித்தளமிட்ட இந்த fingertipscinema.com எனது மனமார்ந்த பாராட்டுகள்

இதன் உரிமையாளர் பிரகாஷ் பேசியாதாவது,

நானும் சினிமாவில் ஏழு வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்தேன், அந்த வலியின் காரணமாக உதவிடும் நோக்கத்தோடுதான் இந்த fingertipscinema.comயை ஆரம்பித்தேன். இது சினிமாவில் வாய்ப்பு தேடும் புது முகங்களுக்கு நிச்சயமாக உதவியாக இருக்கும். இதில் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றிய விவரங்கள் மட்டுமின்றி அவர்களின் வீடியோவும் இணைக்க உள்ளோம், அதனால் அவர்களின் திறமைகளை தேடுபவர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.அதேபோல் தமிழ் சினிமாவில் தொடர்பு எண்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக அனைவரின் தொடர்புகளும் login செய்த பிறகே அவர் உண்மையான சினிமாக்காரரா என்பதை உறுதி செய்த பிறகு தொடர்பு எண்களை கொடுப்போம் மேலும் எங்களால் முடிந்த வரை இதில் தவறு நடக்காமல் பார்த்து கொள்வோம். இதில் பல்வேறு தெழில்நுட்ப திறன்கள் எனக்கு தெரிந்ததால் நிச்சயமாக சிறப்பாக கொண்டு செல்வேன் என்றார்.

Leave a Reply