Friday, December 6
Shadow

சென்னையில் கண்தானத்திற்காக 101 மணி நேர தொடர் மாரத்தான் ஐயர்னிங் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி 25ம் தேதி முதல் 5 நாள் நடக்கிறது

உலக அளவில் தொடர்ந்து 100 மணி நேரம் துணிகள் ஐயர்னிங் செய்ததுதான் இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது. சென்னையை சேர்ந்த டேனியல் சூர்யா என்பவர் 101 மணி நேரம் தொடர்ந்து ஐயர்னிங் செய்து அந்த சாதனையை முறியடிக்கப் போகிறார்.

இந்த சாதனை நிகழ்ச்சி லயன்ஸ் கிளப் ஏ1,ஏ6 இரு மாவட்டங்களின் சார்பில் மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. லயன்ஸ் மாவட்ட கவர்னர்கள் பி.எஸ்.வி.குமார், குணராஜா, லயன்ஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்.தியாகராஜா, முரளி, எம்.பி.சிவராமகிருஷ்ணன், கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் டேனியல் சூர்யா ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.

கின்னஸ் சாதனை முயற்சியாளர் டேனியேல் சூர்யா கூறும்போது: உலக அளவில் தொடர் மாரத்தான் ஐயர்னிங் சாதனை 100 மணி நேரம். இந்த சாதனையை முறியடிப்பதுடன் கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சி.
இந்தியாவை பொறுத்தவரை 15 மில்லியன் மக்கள் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள். இதில் 4.5 மில்லியன் மக்கள் கண் தானத்திற்காக காத்திருக்கிறார்கள். இதில் குழந்தைகள் 60 சதவீதம் பேர்.

இந்த தொடர் மாரத்தான் ஐயர்னிங் நிகழ்ச்சியின் தொடக்க நாள் முதல் சாதனை நிறைவு பெறும் 101 மணி நேர முடிவில் 1 கோடி பேரிடம் கண் தான உறுதியை பெற்றுவிட வேண்டும் என்பதுதான் இந்த முயற்சி. எனது இந்த முயற்சிக்கு லயன்ஸ் கிளப் ஏ1, ஏ6 மாவட்டங்கள் கை கொடுத்திருக்கிறார்கள்.

லயன்ஸ் கிளப் மாவட்ட கவர்னர் குணராஜா பேசும்போது: முதல் முறையாக வெளி நாட்டினர் செய்த கின்னஸ் சாதனையை சென்னை வாலிபர் டேனியல் சூர்யா முறியடிக்க இருக்கிறார். குறிப்பாக சாதனை முயற்சியோடு கண்தான விழுப்புணர்வுக்காகத்தான் இந்த முயற்சியை டேனியல் சூர்யா செய்கிறார். இ ந்த சாதனை முயற்சியின் நோக்கம் தெரிந்து ஸ்பென்சர் பிளாசாவில் கட்டணமில்லாமல் இடம் அளித்திருக்கிறார்கள். பிலிப்ஸ் நிறுவனம் சாதனைக்கு தேவையான உபகரணங்களை வழங்குகிறது. 25ம் தேதி தொடங்கி 30ம்தேதிவரை தொடர்ந்து 101 மணி நேரம் நடைபெறும். கின்னஸ் நிறுவனத்தில் இருந்து வரும் அதிகாரிகள் முன்னிலையில் இ ந்த சாதனை நிகழ்வு முழுவதும் வீடியோ எடுக்கப்படும். சாதனை நிகழ்ச்சியின் போது கண் தான விழிப்புணர்வை முன்னிறுத்தி கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சாதனை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லயன்ஸ்கிளப் ஏ1, ஏ6 மாவட்டங்களின் சார்பில் மாவட்ட கவர்னர்கள் குமார், குணராஜா, மாவட்ட தலைவர்கள் தியாகராஜா, சிவராமகிருஷ்னன், முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Leave a Reply