Tuesday, December 3
Shadow

செவாலிய விருதை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: கமல்

நடிகர் கமலஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செவாலிய விருதை பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக கமலஹாசனுக்கு செவாலியே விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசனுக்கு 1997ம் ஆண்டு செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள படங்களில் நடிப்பாற்றலை கமல் வெள்ளியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய அரசிடம் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும், மாநில அரசிடம் கலைமாமணி விருதையும் பெற்றவர் கமலஹாசனுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 3 முறையும், பிலிம்பேர் விருதை 19 முறையும் கமல் பெற்றுள்ளார். செவாலிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து கமலஹாசனுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் திரையுலகினர் கமலுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமலஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தூதர் செவாலிய விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்ததாக கமல் தெரிவித்துள்ளார். இந்த விருது இதற்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் சத்யஜித்ரே இந்த இரு ஜாம்பவான்களுக்கு தான் கொடுத்து இருகிறார்கள் இனி நான் செய்ய உள்ள கலை இலக்கிய பணிக்காக இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். மேலும் சிறு வயது முதலே என்னை ஆதரித்து வந்த ரசிகர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலுக்கு நடிகர்சங்கம் மற்றும் திமுக பொருளாளர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவிதுள்ளர்கள்.

Leave a Reply