பிரபுதேவாவுடன் தமன்னா இணைந்து நடித்துள்ள தேவி எனும் திகில் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரைக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் ஜாகுவார் எனும் கன்னட படத்தின் புரமோஷனில் தமன்னா பங்கேற்கவுள்ளாராம். முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசுவாமியின் மகன் நிகில் குமார் நாயகனாக அறிமுகமாகும் ஜாகுவார் படத்தை இயக்குனர் மஹாதேவ் இயக்கியுள்ளார். தீப்தி நிகிலுக்கு ஜோடியாக நடிக்கும் ஜாகுவார் படத்தில் தமன்னா குத்தாட்டம் போட்டுள்ளார்.
பொதுவாக தான் நாயகியாக நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலேயே கண்டிசனுடன் கலந்து கொள்ளும் தமன்னா, தான் குத்தாட்டம் போட்ட படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார். அக்டோபர் 2ல் பெங்களூரில் நடைபெறும் ஜாகுவார் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தமன்னா பங்கேற்கின்றாராம். அக்டோபர் 6ல் கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைக்கு வரவிருக்கும் ஜாகுவார் படம் அண்மையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.