புதுமுக நாயகன் வீரபாரதி .சமீரா, எலிஸபெத் , ராஜாராணி பாண்டியன், காதல் சுகுமார் . நெல்லை சிவா.வையாபுரி . கிரேன் மனோகர் நடித்துள்ள படம் தான் ‘வென்று வருவான்’. இப் படத்தை எழுதி இயக்கி தன் ரியாலிட்டி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார் விஜேந்திரன்.
படம் பற்றி அவர் கூறும்போது “இது ஒரு கிராமத்துக்கதை.செய்யாத 8 கொலைகளுக்கு நாயகன் மீது கொலைப்பழி விழுகிறது. தூக்கு மேடை வரை போகிறான். அதற்குள் தான் தன் தாய் பாடும் ஒரு பாடலை இறுதி விருப்பமாகக் கேட்க விரும்புகிறான். அவனது தாய் வரவழைக்கப் படுகிறாள்.அவள் அந்த ஊரில் நல்லதோ கெட்டதோ எந்த நிகழ்வாக இருந்தாலும். பாட்டுப்பாடும் பழக்கம் உள்ளவள். அவளோ அப்போது .உடல் நலிவுற்று கண் பார்வையும் இழந்து இருக்கிறாள். இருந்தாலும் தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு பாடலைப் பாடுகிறாள். அது கேட்பவர்களின் செவியில் விழுந்து இதயம் உருக்கும் பாடல் .அவள் பாடிய பின் எல்லாமே திசை மாறுகிறது .அப்படி என்ன அந்தப் பாடலில் இருந்தது? அதன் பிறகு கொலைப்பழி சுமந்தவனுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் முடிவு ” என்கிறார் விஜேந்திரன்.
வனப்பகுதி்ல் பாட்டு மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளைக் கூட ஈர்த்து இருக்கிறது. இதை அறிந்து இசையின் மகத்துவம் உணர்ந்து வியந்தாராம் இயக்குநர். தன் வென்று வருவான் படத்தில் ஒரு பாடலை க்ளைமாக்ஸ் காட்சியில் பரபரப்பாகப் பயன்படுத்தியிருக்கிறாராம்.
படத்துக்கு ஒளிப்பதிவு ஜெயச்சந்திரன், இசை முரளி கிருஷ்ணன், பாடல்கள் நிகரன், முத்துவீரா, படத்தொகுப்பு ஆர்.எஸ். சதீஸ்குமார் .
படப்பிடிப்பு சென்னையிலும் பெரம்பலூர் பகுதி திருவாலக்குறிச்சி கிராமத்திலும் நடைபெற்றுள்ளது. அம்மா மகன் பாசத்துக்கு புதிய பொழிப்புரை எழுதியுள்ள ‘வென்று வருவான் படம் இம்மாதம் 26 ஆம் தேதி வெளியாகிறது.