Tuesday, September 10
Shadow

திரைப்பட இயக்குனாராக ஆகும் ஜோதிகா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளியான ’36 வயதினிலே’ திரைப்படம் கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக உருவெடுத்தது. இதைதொடர்ந்து தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

’36 வயதினிலே’ பாணியில் பெண்களை மையப்படுத்திய இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ புகழ் பிரம்மா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்துக்கு ‘மகளிர் மட்டும்’ என தலைப்பு வைத்திருப்பதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஜோதிகா, டாக்குமெண்ட்ரி பட இயக்குனராக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply