Thursday, September 29
Shadow

நம் ஆட்கள் இடமிருந்து சுருதியை விஜய் தூண்டில் போட்டு காப்பற்றி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்!!

பெரிய ஆள் என்றால் நாலு பேரு நாலு விதமா தான் சொல்லுவான் அதுக்கு எல்லாம் அசரக்கூடாது தளபதி அசர மாட்டார் காரணம் அவர்தான் அசரா புலி ஆச்சே!!

மீம்ஸ் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கி விஜயகாந்த் முதல் விஜய் நம் ஆட்கள் வச்சு செய்து வருகிறார்கள் அந்த வகையில் பிரேமத்தால் சிக்கி சின்னா பின்னம் ஆனா சுருதியை சற்று காப்பாத்தி உள்ளார் நம் பாச தலைவன்..,
மலையாளத்தில் சக்கைபோடு போட்ட ப்ரேமம் படத்தை தெலுங்கில் வெளியிடுகின்றனர். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஒரு நிமிட பாடல் காட்சி யூடியூப்பில் வெளியிடப் பட்டது. இதில் மலர் டீச்சராக ஸ்ருதி நடித்துள்ளார் மலையாளத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவியின் நடிப்பையும், தெலுங்குப் படத்தில் மலர் டீச்சராக வரும் ஸ்ருதியின் நடிப்பையும் ஒப்பிட்டு, சமூக ஊடகங்கள் ஸ்ருதியை செம கலாய்ப்பு செய்து வந்தனர்.

அய்யோ ஆளை விடுங்க என்று ஸ்ருதியே பதிவு போடும் அளவுக்கு மீம்ஸ்கள் பதிவிட்டனர். இப்போது அனைவரின் கவனமும் விஜய் மீது விழுந்துள்ளது.

விஜய நடிக்கும் படத்தில் தலைப்பு பைரவா என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம்., அந்த தலைப்பை கிண்டல்
செய்து நெட்டிசன்கள் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

ரவையை பாலிதின் கவரில் வாங்கக் கூடாது, பையில் தான் வாங்கனும் என்ற கருத்தை சொல்லும் விதமாக ’’பை ரவா” என்று பெயரிட்டுள்ளதாக கிண்டல் செய்து வருகின்றனர்.

Leave a Reply