Wednesday, December 4
Shadow

பார்த்திபன் இயக்கத்தில் இணையும் சாந்தனு மற்றும் பார்வதி நாயர்

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

நாயகன், நாயகி ஒப்பந்தம் செய்யாமல் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் பார்த்திபன். தற்போது சாந்தனு, பார்வதி நாயர் ஆகியோர் நாயகன், நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சத்யா இசையமைக்க, பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் பார்த்திபன் “‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் சாயல் இதில் இருக்காது. இது வேறு ஒரு வித்தியாசமான களம். கண்டிப்பாக அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.

சாந்தனுவின் தந்தை பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் பார்த்திபன். தற்போது தனது குருநாதரின் மகனை தன் படத்தில் நாயகனாக்கி இருக்கிறார்.

Leave a Reply