சின்னத்திரை விளம்பரம் மூலம் பப்ளிக்கை சூதாட்டம் ஆட தூண்டும் Junglee Rummy நிறுவனம் மீதும், அதுக்கு காசு வாங்கிட்டு விளம்பரம் -ங்கற பேரிலே நடித்த நடிகர்கள் பிரகாஷ் ராஜ் & ராணா மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கோவையை சேர்ந்த சோசிய ஆக்டிவிட்டி ஒருவர் சிட்டி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் சூதாட்ட தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், தற்போது ஜங்லி ரம்மி என்ற விளம்பரம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி வருதுல்லா.. அதன் மூலம் பகிரங்கமாக பொது மக்களை சூதாட்டத்திற்கு அழைக்கும் வகையில், ஒளிபரப்பாகும் இந்த விளம்பரத்தை தடை செய்வதுடன், அந்நிறுவனத்தின் மீதும், அந்த விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர் இளங்கோவன் என்பவர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.
அத்துடன் இது போன்று ரம்மி சர்கில், ரம்மி இணையதளங்களையும் அதன் செயலிகளையும் தடை செய்ய வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் அவர் கேட்டுருக்கார்?