Tuesday, December 3
Shadow

பிரபு தேவா தமன்ன நடிக்கும் தேவி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகுது

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் ‘தேவி’ திரைப்படம் அக்டோபர் 7-ம் தேதி வெளியீட்டுக்கு மாற்றியிருக்கிறார்கள்.

பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவி’. இயக்குநர் விஜய் இயக்கி வரும் இப்படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

முதலில் இப்படம் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால் செப்டம்பர் மாதம் நிறைய படங்கள் வெளிவர இருப்பதால், ‘தேவி’ திரைப்படம் அக்டோபர் வெளியீட்டுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது அதனை படக்குழு உறுதிப்படுத்தி, அக்டோபர் 7ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது. ‘ரெமோ’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களோடு ‘தேவி’யும் அக்டோபர் 7 வெளியீட்டில் இணைந்திருக்கிறது.

Leave a Reply