Saturday, October 12
Shadow

பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்

பைரவா படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்தது. பொங்கல் விடுமுறையில் படம் வசூலை அள்ளினாலும், ஜல்லிக்கட்டு பிரச்சனை காரணமாக வசூல் பெரிதும் அடிப்பட்டது.

இந்நிலையில் பைரவா பெரும் நஷ்டத்தை தொடும் என கணித்தனர், நம் தளத்தில் கூட இதுக்குறித்து விரிவாக கூறியிருந்தோம்.

இந்த வாரம் சிங்கம்-3 வருவதாக இருந்ததால் கண்டிப்பாக பைரவா நஷ்ட ஈடு வழக்கு விரைவில் வரும் என எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், இந்த வாரமும் எந்த பெரிய படமும் வராததால், பைரவா குடியரசு தின விடுமுறை, வார இறுதி நாட்களில் ஹவுஸ்புல் ஆகியுள்ளதாம்.

இதனால் கொஞ்சம் நிம்மதியான நிலையை அடைந்துள்ளனர் திரையரங்க உரியமையாளர்கள்.

Leave a Reply