Tuesday, December 3
Shadow

மலேசிய கலைஞர்கள் உருவாக்கிய “மறவன்”

தமிழ் படங்களுக்கு நிகரான கமர்ஷியல் படங்களை மலேசிய கலைஞர்களும் உருவாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கோலாலம்பூர் இன்னொரு கோடம்பாக்கமாக உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க மலேசிய கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் படம் மறவன். படித்து விட்டு நேர்மையாக விவசாயம் செய்து வாழ நினைக்கும் ஒரு இளைஞன், குறுக்கு வழியில் சம்பாதித்து சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் இன்னொருவன். இவர்கள் இருவரின் நினை என்ன ஆகிறது என்கிற கதை கொண்ட படம். இந்த கதையின் வழியாக மலேசியாவில் குழந்தைகள் கடத்தப்படும் சம்பவத்தை திடுக்கிடும் வகையில் சொல்கிற படம்.

கோல்டன் பீகாக் பிலிம் புரொடக்ஷன் சார்பில் சந்துரு தயாரித்துள்ளார். மலேசியாவை சேர்ந்த எஸ்.டி.புவனேந்திரன் இயக்கி உள்ளார். இவர் மோகன்ராஜாவிடம் உதவியாளராக இருந்து சினிமாவை கற்றவர். ஹரிதாஸ், குமரேஷ், டெனிஷ், கவிதா, தியாகராஜன், சங்கீதா, கிருஷ்ணசாமி, புஷ்பா, சீலன் என மலேசிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். மார்ஷல் ராபின்சன் பின்னணி இசை அமைத்துள்ளார். பசிசோ மந்த்ரா, ஜோஸ் பிராங்ளின் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளனர். ராஜா வச்சலம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மலேசியாவில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் அடுத்த கட்டமாக தமிழ்நாடு உள்பட தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது, இயக்குனர் மோகன்ராஜா, தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply