5 மனிதர்கள்
4 வாழ்க்கை முறைகள்
3 கொலைகள்
2 மணிநேரம்
1 பழிவாங்குதல்
இந்த ஐந்தும் ஒன்று சேரும் கதையை திரைக்கதை வடிவமாக அமைத்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் உளவியல் சார்ந்த த்ரில்லராக உருவாகிய படம் “54321”.
புதுமுக இயக்குனர்களுக்கு முன்னோடியாய் விளங்கும் கார்த்திக் சுப்புராஜின் பிட்சா படத்தில் துணை இயக்குனராய் பணியாற்றிய A.ராகவேந்திர பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பிட்சா தமிழ் திரையுலகில் ஒரு புதிய கோணத்தை உருவாக்கியதை போல தன்னுடைய படமும் புதிய ட்ரண்டை உருவாக்கும் என்று கூறுகிறார்.
கதையின் நாயகனாக ஷபீர் நடிக்கிறார். கதாநாயகனாக அர்வினும் கதாநாயகியாக பவித்ராவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரவி ராகவேந்தர், ரோகினி, ஜெயகுமார், “பசங்க” சிவகுமார், ரவி வெங்கட்ராமன் ஆகியோர் நடிக்கின்றனர்.