Saturday, February 8
Shadow

மெரீனாவில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில் குழந்தைக்கு பேர் வைத்த லாரன்ஸ்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பல லட்சம் இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் 4 வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் போராட்டம் ஆரபித்த நாளிலிருந்து இரவு பகல் பாராமல் இன்றுவரை தான் ஒரு நடிகன் என்பதை மறந்து உங்களில் ஒருவனாக அவர்களுடன் போராடி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் மணாவர்களுக்கு தேவையான மொபைல் டாய்லெட், குளுகோஸ், செல்போன் சார்ஜர் போன்ற அனைத்தையும் தனது சொந்த செலவில் செய்து வருகிறார். போராட்ட களத்தில் இருந்த ஒரு கைக்குழந்தைக்கு தமிழ் அரசன் என்று பெயர் வைத்தார். தான் ஒரு நடிகன் என்பதை தாண்டி தமிழ் மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டவராக லாரன்ஸ் திகழ்வது பாராட்டுக்குரியது. நிச்சயம் இந்த போராட்டம் வெற்றிபெறும்.

Leave a Reply