Tuesday, October 8
Shadow

ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து மேலும் 120 திரையரங்குகளில் வெளியாகும் “ முடிஞ்சா இவன புடி “ !

நான் ஈ “ சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “முடிஞ்சா இவன புடி” படத்திற்கு மக்களிடம் தற்போது மேலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் வெள்ளி கிழமையிலிருந்து தமிழகத்தில் கூடுதலாக 120 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. கன்னடத்தில் இப்படம் நான்கு நாட்களில் 18 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . முடிஞ்சா இவன புடி கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது.

முடிஞ்சா இவன புடி படத்தில் நான்ஈ சுதீப் ,நித்யா மேனன் ,பிரகாஷ் ராஜ் , நாசர் , சதீஷ், டெல்லி கணேஷ் , இமான் அண்ணாச்சி ,முகேஷ் திவாரி , சரத் லோகிஸ்டாவா ,சாய் ரவி ,அவினாஷ் ,அச்சுதா ராவ் ,லதா ராவ் , சிக்கன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

கலை – லால்குடி இளையராஜா,சண்டை பயிற்சி – கனல் கண்ணன் ,பாடல்கள் – மதன் கார்க்கி ,உடை அலங்காரம் – தீபாலி நூர் , ஒளிப்பதிவாளர் – ராஜரத்தினம் ,இசை டி.இமான் ,படத்தொகுப்பு – பிரவீன் அன்டனி , கதை – டி. சிவகுமார் எழுத திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்– கே.எஸ்.ரவிகுமார். ராம்பாபு ப்ரொடெக்ஷன்ஸ் சார்பில் எம்.பி. பாபு தயாரித்துள்ளார்.

Leave a Reply