இப்போதெல்லாம் ரசிகர்களையும் நட்சத்திரங்களையும் இணைக்கும் கருவியாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டு வருகின்றன. குறிப்பாக பேஸ்புக்கை விடவும் நட்சத்திரங்ள் அதிகளவில் இயங்குவது டிவிட்டரில் தான்.
அந்தவகையில் டிவிட்டரில் உள்ள தமிழ் நடிகர்களில் ரஜினி, தனுஷ், சித்தார்த் ஆகியோர் ஏற்கனவே இரண்டு மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இதனால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ள அவர், ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.