
ஷங்கர் பிறந்தநாளான இன்று ரஜினி படம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இயக்குனர் ஷங்கருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி வரும் நிலையில், தற்போது அவர் ரஜினியை வைத்து இயக்கி வரும் ‘2.ஓ’ படம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது, ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய அறிவிப்புதான் அது.
ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பி முழுவீச்சில் நடந்து வருகிறது. அமெரிக்காவுக்கு ஓய்வு எடுப்பதற்காக சென்ற ரஜினி, சமீபத்தில்தான் சென்னை திரும்பினார். இதையடுத்து, இந்த மாத இறுதியில் ‘2.ஓ’ படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற நவம்பர் மாதத்தில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் டீசரையும் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வருடத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.