
சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து பல நடிகர்கள் சின்னத்திரையிலிருந்து சினிமாவில் காலடி வைக்கின்றனர்.
அந்த வரிசையில் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக மனதில் பதிந்த கவின் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
தளபதி பட வசனமான நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தலைப்பில் உருவாகவிருக்கும் இதில் கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் சிவகுமார் இயக்கும் இப்படத்தில் தரண் இசையமைக்கிறார்.