Tuesday, December 3
Shadow

‘றெக்க’ மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன்- விஜய் சேதுபதி

கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தை ரத்தினசிவா இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று செனனியில் நடைபெற்றது.

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பாடல்கள் குறுந்தகடை வெளியிட இயக்குநர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசுகையில், “இப்போது இங்கே எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரே பதற்றமாக இருக்கிறது. இந்த இடம் நான் எதிர்பார்க்க வில்லை. எல்லாமே நீங்கள் கொடுத்தது. அதற்கு உங்களுக்கு என் நன்றி, போன வெள்ளிக்கிழமை ஒரு படம் ‘ஆண்டவன் கட்டளை’ வெளியாகியிருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பாடல்கள் வெளியீட்டுவிழா. இன்னும் இரண்டே வாரத்தில் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது. எனக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. படங்கள் வரிசையாக வருவதற்குக் காரணம் நேரம் அப்படி அமைந்தது தானே தவிர இவ்வளவு வேகமாக படங்களில் நடிக்க முடியாது. வெளிவரும் தேதிகள் அப்படி தொடர்ச்சியாக அமைந்து இருக்கிறது.

முதலில் ‘றெக்க’ மாதிரி ஒரு படம் நமக்கு சரிப்பட்டு வருமா என்று பயந்தேன், முடியுமா என தயங்கினேன். முடியுமா என எனக்குள் 1008 கேள்விகள் எழுந்தன, ஆனால் சிவா கதை சொன்ன விதம் வசனம் பேசிக்காட்டிய முறை எல்லாமே என்னைக் கவர்ந்தது. காற்றிலேயே படம் வரைந்து சிவா என்னென்னவோ செய்தார். என்னைக் கவர்ந்தார். அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது.

இந்தக் கதைமேல் நம்பிக்கை வைத்து, என் மேல் நம்பிக்கை வைத்து தயாரிக்க முன்வந்த கணேஷுக்கு நன்றி. படத்தில் எதற்கும் கஷ்டப் படவில்லை. ஆனால் ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதுதான் சிரமமாக இருந்தது. கஷ்டப்பட்டேன். இப்படத்தில் பஞ்ச்சுக்கே ஒரு பஞ்ச் இருந்தது.

இயக்குநர் சிவா ஒரு நடிகனை புரிந்து கொண்டு காட்சிகள் அமைத்திருந்தார். அவர் மேலும் உயர்வார். லட்சுமி மேனனுக்கும் நல்ல பாத்திரம். சதீஷ் அப்படி கலகலப்பாக வருகிறார். கே.எஸ்.ரவிகுமார் சாரின் விசிறி நான் ‘தங்கமகன்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். அவருடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் அவர் நடித்திருப்பது படத்துக்கு பலமாகி அழகாக மாறியிருக்கிறது. படக்குழுவினருக்கு நன்றி. ரசிகர்களுக்கு நன்றி. சத்தியமாக நிறைய்ய பேசத் தோன்றுகிறது ஆனால் பேச முடியவில்லை அவ்வளவு பதற்றமாக இருக்கிறேன்” என்றார்.

Leave a Reply