சமீபத்தில்ப தமிழ்ட சினிமாவில்த்தி எல்லோராலும்ன் எதிர் பார்த்த படம் என்று சொல்லலாம் அதற்கு காரணம் படத்தின் முன்னோட்டம் தான் ஆனால் படத்தை பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். தமிழ் சினிமாவில் ஆடியன்ஸிற்கு நரம்பு புடைக்கும் படி ஒரு சில படங்கள் வரும். அந்த வகையில் ஹரிதாஸ் என்ற தரமான படத்தை இயக்கிய குமரவேலின் அடுத்த படைப்பு தான் இந்த வாகா.
இதுவரை மிலிட்ரியை பற்றி மட்டுமே பார்த்து வந்த நமக்கு இந்த வாகா முதன் முறையாக இந்திய பார்டரில் வேலைப்பார்க்கும் ஆர்மி ஆபிசர்ஸ் பற்றி கூறியுள்ளனர்.
கதைக்களம்ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் சிறைச்சாலையில் விக்ரம் பிரபு இருக்க, ப்ளாஷ்பேக் காட்சிகளாக படம் விரிகிறது. விக்ரம் பிரபு படித்து முடித்துவிட்டு ஜாலியாக பொழுதை கழிக்க வேண்டும் என எண்ண, அவருடைய தந்தை மளிகை கடையில் வந்து உட்கார் என கூறுகிறார், தந்தையின் தொல்லையில் இருந்து விடுபடவும், மிலிட்டிரியில் சரக்கு கிடைக்கும் என்பதற்காகவும் BSF-ல் வேலைக்கு சேர்கிறார்.
அங்கு தனிமையில் வாட, இதற்கு சொந்த ஊரே பராவயில்லை என்ற நிலைக்கு வந்துவிடுகிறார், அந்த தருணத்தில் யதார்த்தமாக ஹீரோயினை பார்க்க, பிறகு என்ன பார்த்தவுடன் காதல், பட்டாம்பூச்சி பறக்க, பல்ப் வெடிக்க அவர் பின்னே சுற்றுகிறார்.
பிறகு காஷ்மீரில் ஒரு உள்நாட்டு கலவரம் வெடித்து பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று போராட்டம் நடத்த, பிறகு தான் தெரிகிறது ஹீரோயின் பாகிஸ்தான் என்று, அதன் பின் பாகிஸ்தானுக்கு சென்ற தன் காதலியை எப்படி கரம் பிடித்தார், எதற்காக பாகிஸ்தான் சிறையில் இவர் இருக்கிறார்? அங்கிருந்து தப்பித்தாரா? என்பதை உணர்ச்சிப்பொங்க கூறியுள்ளார் குமரவேல்.
படத்தை பற்றிய அலசல்
விக்ரம் பிரபுவையெல்லாம் பார்த்தாலே நீயெல்லாம் ஆர்மி ஆபிசர் தான்பா என்று கூறிவிடலாம், 6 அடி உயரம், அகலமான உடல்வாகு என நெஞ்சை நிமிர்த்துகிறார், அதிலும் சண்டைக்காட்சியில் மிரட்டுகிறார், ரொமான்ஸில் இன்னும் சொதப்புகிறார்.
படத்தின் கதையே ஹீரோயினை மையமாக கொண்டது தான் என்பதால் படம் முழுக்க அவரும் பயணிக்கின்றார், அறிமுகம் ரன்யா, பாகிஸ்தான் பெண் போலவே இருக்கிறார், கதையின் ஆழம் அறிந்து நடித்துள்ளார்.
மிலிட்ரி என்றாலே சண்டையின் போது தான் சிரமம் மற்ற நேரத்தில் எல்லாம் ஜாலியாக மிலிட்ரி சரக்கு அடித்துவிட்டு சுற்றி வருவார்கள் என பலரும் நினைக்கும் நேரத்தில், வீடு, வாசம், சொந்தம் என அனைத்தையும் விட்டு நாட்டிற்காக ஏதோ ஒரு மலையில் துப்பாக்கி ஏந்திய கையுடன் வெறித்து வானத்தை பார்த்து பொழுதை கழிப்பவர்கள் என அவர்களின் வாழ்க்கையை தெளிவாக காட்டியுள்ளனர்.
படத்தின் மையக்கருவே காதல் தான், காதலால் ஒருவன் எந்த நிலைக்கு செல்கிறான் என்பதை காட்ட நினைத்த குமரவேல், இன்னும் கொஞ்சம் காதல் காட்சிகளை நன்றாக அல்லவா எடுத்திருக்க வேண்டும்?, ஏன் காதல் காட்சிகளில் அப்படி ஒரு சொதப்பல், முதல் பாதி வேகத்தையே அந்த காட்சிகள் தான் குறைக்கின்றது.
படத்தின் இரண்டாம் பாதியில் பாகிஸ்தான் சிறைச்சாலையில் இந்திய வீரர்கள் படும் கஷ்டம் பார்ப்பவர்களை பதட்டப்பட வைக்கின்றது, விக்ரம் பிரபு தப்பிக்க வேண்டும், மாட்டிவிடக்கூடாது என நம் மனது பதட்டத்துடன் இருந்தாலும் அதற்கான காட்சியமைப்புக்கள் மிகவும் செயற்கைத்தனமாக உள்ளது. படத்தின் வசனம் பல இடங்களில் நரம்பு புடைக்கும் படம் 90களில் வந்திருந்தால்.
சதீஷ் குமாரின் ஒளிப்பதிவில் காஷ்மீர் அழகு மட்டுமின்றி காடு, மலைகளையும் அச்சு அசலாக கண்முன் கொண்டு வருகின்றது, மேலும் லால்குடி இளையராஜாவின் செட் அப்படியே பாகிஸ்தானை நம் கண்முன் கொண்டு வருகின்றது. இமானின் பின்னணி இசை கலக்கல்.
க்ளாப்ஸ்
எடுத்துக்கொண்டு கதைக்களம் முதன் முறையாக BSF ஆபிசர்ஸ் பற்றி கூறிய விதம்.
காதல் காட்சிகள் கொஞ்சம் சொதப்பினாலும், ரன்யாவை பாகிஸ்தானில் சேர்க்க விக்ரம் பிரபு செல்லும் காட்சிகள், கொஞ்சம் பாலிவுட் படமான பஜிரங்கி பைஜான் ஸ்டைல். ரசிக்கவும் வைக்கின்றது.
டி. இமானின் பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் ஆர்ட்.
பல்ப்ஸ்
டி.இமானின் பாடல்கள், தடுமாறும் திரைக்கதை, 90களில் வெளிவந்த விஜயகாந்த் படம் போல் கிளைமேக்ஸ் காட்சிகள் இருப்பது.
அதிலும் வில்லன் இந்தியாவை திட்ட ஆரம்பித்தவுடன் மீண்டும் ஹீரோ அடிப்பது இதெல்லாம் அர்ஜுனே மறந்துவிட்டார், தற்போது போய் நீங்கள்?.
மொத்தத்தில் இன்னும் கொஞ்சம் பரபரப்பை கூட்டியிருந்தால் வாகா முழுமையாக வெற்றியை ருசித்திருப்பான்.
Ranking 5/2.5 பாவம் தயாரிப்பாளர்