விஜய் எந்த அளவுக்கு சிறந்த நடிகரோ அந்த அளவுக்கு சிறந்த பாடகரும் என்பது இந்த உலகம் அறிந்த விஷயம் இது எப்படி பைரவா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு தெரியாமல் போச்சு என்று தெரியவில்லை
தற்போது பைரவா படத்தில் நடித்து வரும் விஜய் அப்படத்தில் ஒரு டூயட் பாடல் பாடிவுள்ளாராம்.
அதற்கான டியூனை முன்பே கேட்டு வாங்கிய விஜய், சில நாட்கள் அதை உள்வாங்கியபடி ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தவர், பல்லவி, சரணம் என பிட் பிட்டாக சிங்கிள் டேக்கில் பாடிக்கொடுத்து விட்டாராம்.
அதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த சந்தோஷ் நாராயணன், எப்படி சார் பின்னணி பாடகர்கள் மாதிரி பாடிட்டீங்க? என்று கேட்டதற்கு, நானும் பின் னணி பாடகர்தான். இப்ப பாட ஆரம்பிக்கல, என்னோட இரண்டாவது படத்தில் இருந்தே பாடிக்கிட்டிருக்கேன் என்றாராம். இதை கேட்ட சந்தோஷ் நாராயணன் மிகவும் மோசமாக வழிந்துள்ளார்.