Tuesday, November 5
Shadow

விஜய் உத்தரவால் மக்கள் இயக்கம் சுறுசுறுப்பு! பஞ்சாயத்து தேர்தலிலும் விறுவிறு?

அதிரடி உத்தரவுகள் போட்டு, ஆங்காங்கே புரட்சி கிளப்பி வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இப்போது விஜய் மன்ற விஷயங்களில் தலையிடுவதில்லை. விஜய்யை ரீச் பண்ணுவதும் அவ்வளவு எளிதல்ல. ‘தலைவர் புதுக்கட்சி ஆரம்பிப்பாரா? கிழக்கே வெளிச்சம் அடிக்குமா?’ என்று காத்துக் கொண்டிருந்த மன்ற ரசிகர்களுக்கு நல்ல காலம் ஸ்டார்ட்!

முதல்ல நம்ம இயக்கம் சுறுசுறுப்பா இருக்குங்கறதை நாட்டுக்கு காட்டியாகணும் என்றாராம் விஜய். அதையடுத்துதான் தொடரி, ஆண்டவன் கட்டளை படத்தின் திருட்டு விசிடிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் குரல் கொடுத்தார்கள். அதுமட்டுமா? மாவட்டம் தோறும் கூடிய ரசிகர்கள், இது தொடர்பாக கலெக்டரிடமும் மனு கொடுத்தார்கள். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்களும், தனுஷ் ரசிகர்களும் செம ஹேப்பி. சக கலைஞர்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய நல்ல மனுஷன் ஆனார் விஜய்.

இந்த நிலையில்தான் அடுத்த பாய்ச்சலுக்கு தயாரானார்கள் ரசிகர்கள். வருகிற பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடுவது என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு கிடுக்கிப்பிடி போட்ட விஜய், மாநாகராட்சி மாதிரி பெரிய ஏரியாவுக்குள் நுழைய வேண்டாம். முதல்ல கவுன்சிலர் மாதிரி சின்ன போஸ்டிங்குல போட்டியிடுங்க. மற்றதை பிறகு பார்க்கலாம் என்றாராம். ஆனால் அதில் கூட மன்றக் கொடியை பயன்படுத்த வேண்டாம். என் படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கூறிவிட்டாராம்.

இருந்தாலும், “நிற்க அனுமதித்தாரே… அதற்கே நமஸ்காரம்” என்று சந்தோஷமாகிறது விஜய் மக்கள் இயக்க வட்டாரம்!

இந்த சிறு துளி சென்னை வெள்ளமாக மாறி, மக்களை அலற விடட்டும்!

Leave a Reply