கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் விண்ணைத் தாண்டி வருவாயா. மிக பெரிய வெற்றிப்படம் என்று சொல்லணும் சிம்பு திரை வாழ்கையில் இன்னும் அதுபோல வெற்றியை பார்க்கவில்லை என்றுகுட சொல்லலாம்.
இன்றளவும் இப்படம் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் முதல்நாளில் சிம்பு ரசிகர்களுடன் படம்பார்த்து கொண்டிருந்தபோது படம் முடிவதற்கு முன்பாகவே சிலர் எழுந்து சென்றார்களாம்.
இதனால் அப்செட்டான சிம்பு, இந்த படம் அவ்ளோதான் என எண்ணினாராம்.
இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் கூட பேசிய சிம்பு, ” முதல் வாரம் ஹிட் என்றார்கள். இரண்டாம் வாரம் சூப்பர் ஹிட் என்றார்கள்.
அதன்பின் ப்ளாக் பஸ்டர், காவியம் என்றெல்லாம் சொன்னார்கள். எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அதனால்தான் அச்சம் என்பது மடமையடா படத்தை முதல்நாளில் ரசிகர்களுடன் பார்க்கவில்லை” என்றார்.