Saturday, October 12
Shadow

வியாபாரத்தில் கொடி கட்டும் சிவகார்த்திகேயனின் “ரெமோ”

தற்போதைய வசூல் சக்கரவர்த்தி என்றால் அது சிவகர்த்திகேயன் பதினைந்து காலமாக இருக்கும் சுள்ளான் மற்றும் முன்னணி நடிகர்கள் படத்தை ஓரம் தள்ளி வியாபாரத்தில் கொடி கட்டுபவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் ரஜினிமுருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அண்மையில் இப்படத்தின் வியாபாரமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 32 கோடிக்கு வியாபாரம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் கேரியரில் இதுதான் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply